1. வாழ்வும் நலமும்

சுகரை அடியோடு விரட்ட எளிய வழி- எலுமிச்சைப்பழம் ஒன்று போதும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The Easy Way to Get Rid of Sugar - One Lemon Enough!

நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், ஆரோக்கியம் எப்போதுமே நம் கையில், நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதற்கு சில இயற்கையான பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதும் அவசியம்.

குறிப்பாக பெரும்பாலானோர் எதிர்கொள்ளும், சுகர், பிரஷர் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கு இயற்கைப் பொருட்களைத் தவறாது எடுத்துக்கொள்வதன் மூலம் தீர்வு காண முடியும். அதில் ஒன்று சுகர் எனப்படும் நீரழிவுநோய் .உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நிரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல ஆங்கில மருத்தவ முறைகள் இருந்தாலும் எளிதில் கிடைக்கக்கூடடிய இயற்கை பொருட்கள் அதைவிட சிறந்த பலனை கொடுக்கும். இதற்கு, ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை மிகப் பெரிய பலனைத் தருகிறது.

கழிவுகளை வெளியேற்ற

கடுகு சிறிதானாலும் காரம் குறையாது என்பது போல எலுமிச்சை சிறிய வடிவில் இருந்தாலும் அது நமக்கு பெரிய பயனை தருகிறது. உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிக்கும்போது பெரிய பயன்தரும். அதோடு மட்டுமல்லாமல், உடல் கழிவுகளை வெளியேற்றவும், சருமம் மற்றும் கூந்தல்தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்க எலுமிச்சை சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

புத்துணர்ச்சிக்கு

பொதுவாக எலுமிச்சையில், வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து, என அதிகளவு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடக்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சியுடன் இரக்க உதவுகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவைப்படும் வைட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை பழம் கொடுத்துவிடுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்களையும், வைட்டமின் சி மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம். அதிகபட்சமாக ஒரு எலுமிச்சையில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் சுமார் 9.6 சதவீதத்தை அளிக்கிறது அதிக நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும்போது உடலில் குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளைசரைடு அளவை குறைத்து இன்சுலின் தேவையை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பாக நோய்களை தடுப்பதற்கும் இது பயன்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரமைக்க நார்ச்சத்து முக்கிய பங்கை கொடுக்கிறது.

மேலும் எலுமிச்சை பழத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு நன்மை தரும். இதுபோக, இரத்த அழுத்தத்தை குறைத்து பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் செரிமானத்திறனை சீராக வைத்திருக்க எலுமிச்சை சாறு பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதில் உள்ள குறைந்த கலோரியும், கொழுப்பும், சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய பலனை கொடுக்கிறது.

வீட்டில் அசைவ உணவு சமைக்கும்போது எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்தலாம். வறுத்த மற்றும் வேகவைத்த காய்கறிகளுடன் எலுமிச்சை சாறை சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். பொதுவாக எலுமிச்சை பழத்தை அனைத்து நேரங்களிலும் எடுத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்தை ஏற்படுத்த உதவும். மேலும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

English Summary: The Easy Way to Get Rid of Sugar - One Lemon Enough! Published on: 14 February 2022, 01:23 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.