ஆரோக்கியத்திற்கு மட்டுல்ல, வெற்றிலை என்னும் Skin Doctor அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக உள்ளது. வெற்றிலை செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பல தோல் பிரச்சனைகளுக்கு, உடல நல பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது என்பதை பலரும் அறியாத உண்மை.
வெற்றிலை செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பல சரும பிரச்சனைகளுக்கும், உடல் நல பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது என்பதை பலரும் அறியாத விஷயமாக உள்ளது.
வெற்றிலை என்பது தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. வந்தாரை உபசரிப்பது முதல், திருமணம் உள்ளிட்ட மகிழ்ச்சியான வைபவங்கள் அனைத்திலும் வெற்றிலை இடம்பெறுகிறது. இத்தனை சிறப்பு மிக்க வெற்றிலைப் பயன்பாடு, அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் அருமருந்தாகவும் அமையும். இது சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வெற்றிலை நீரால் முகத்தை சுத்தம் செய்வதன் மூலமும் பல வகையான அலர்ஜிகள் குணமாகும். இது தோல் எரிச்சல், வலி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.
பயன்படுத்துவது எப்படி?
-
வெற்றிலையை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து தடவவும். இந்த பேஸ்ட்டை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 நிமிடம் வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை சுத்தம் செய்யவும்.
-
ஒரு கைப்பிடி வெற்றிலையை அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது நன்கு தடவவும். பின் 5 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு பொலிவை தரும்.
-
வெற்றிலையை வேகவைத்து அதன் நீரால் முகத்தைக் கழுவுவதும் பலன் தரும்.
-
வெற்றிலைப் பொடி, முல்தானி மிட்டி, கடலை மாவு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழிந்த பின் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.
வியக்கத்தக்க நன்மைகள்
-
கரும்புள்ளிகள் நீங்கும்.
-
சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் வெற்றிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் சருமத்தை பொலிவுறச் செய்யும் தன்மை உள்ளது.
-
வெற்றிலையின் பயன்பாடு தோல் தொற்று மற்றும் ஒவ்வாமை பிரச்சனையிலும் உங்களுக்கு நன்மை பயக்கும்.
-
இதில் உள்ள ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் சரும அலர்ஜியை குணப்படுத்துகிறது.
-
நீங்கள் வயதாகும்போது, உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. வெற்றிலையை பயன்படுத்துவதால் முதுமையின் அறிகுறிகள் நீங்கும்.
மேலும் படிக்க...
உடல் எடையைக் குறைக்க உதவும் ராகி!
நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!
Share your comments