உணவு என்பது நம் பசியைப் போக்கும். ஆனால் அதனை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாமா? என்றால், அப்படி எடுத்துக்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது எந்தவொரு உணவுப் பொருளையும் உட்கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதனால்தான் காலை உணவைத் தவிர்ப்பது, பசி வந்தபிறகு சாப்பிடும் நேரத்தைத் தாண்டிச் சாப்பிடுவது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
அந்த வகையில், மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை தவிர்க்க வேண்டிய உணவுகளை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.
பிட்சா, பர்கர், பாஸ்தா, சாண்ட்விச் போன்றவற்றை மதியம் மற்றும் மாலை வேளைகளுக்கான உணவு மெனுவில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைக்க வேண்டும்.மதியம் முதல் மாலை வரை உணவில் துரித உணவுகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது . இதற்கான முக்கிய காரணம், இந்த உணவுகள் பசியை நீக்கினாலும், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதில்லை. இந்த உணவுப் பொருட்கள் உடலில் மந்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகின்றன.இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் வேலை பாதிக்கப்படுவதுடன் உடல் எடையும் கூடும்.
காய்கறி சூப்
பொதுவாக சாப்பாட்டுக்கு முன்பு சூப் குடிப்பது பலருக்கு வழக்கம்.
வெஜிடபிள் சூப்பில் கலோரிகள் மிகக் குறைவு. இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதில் புரதம் இல்லை. இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசியை நிறுத்த முடியாது. பசி உணர்வு ஏற்படாமல் இருக்க புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதே நல்லது.
எனவே மதிய உணவில் புரதம் நிறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும். அப்படியே மதியம் சூப் குடித்தாலும் சிக்கன் சூப் சாப்பிடுங்கள். சிக்கன் சூப்பில் லீன் புரதம் உள்ளது. ஓட்ஸ், அரிசி, ஆப்பிள் அல்லது ரொட்டி ஆகியவற்றை சிக்கன் சூப்புடன் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...
புற்றுநோயைத் துவம்சம் செய்யும் 5 சூப்பர் உணவுகள்!
ஆயுளை அதிகரிக்கும் நெல்லி-சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் மந்திரசக்தி!
Share your comments