பண்டைய காலத்தில் எண்ணற்ற பாரம்பரிய நெல் வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டதாகவும், அடிப்படையில் அனைத்துமே எளிதில் செரிமானமாகக் கூடியவையாகவும், மலச்சிக்கலை நீக்கும் தன்மை கொண்டவையாகவும் இருந்தன.
அன்னமிளகி, அறுபதாங்குறுவை, பூங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுப்பொன்னி, மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குதிரைவால் சம்பா, சிவப்புக் கவுணி, மிளகுச்சம்பா என்று, 162 பாரம்பரிய நெல் வகைகளை ‘விக்கிப்பீடியா’ பட்டியலிட்டுள்ளது.
பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் வகைகள் நீளமாக வளரக்கூடியவை. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என அனைவரும் பயன் பெற்று ஆரோக்கியமுடன் இருந்தனர். பாரம்பரிய நெல் இரகங்களுக்கு எண்ணற்ற சிறப்புகள் இருந்தன. மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக் கூடிய தன்மை கொண்டதாக இருந்தது.
விதைப்புச் செய்த வயல்களில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படுவதில்லை. வரப்புக் குடைஞ்சான், குழியடித்தான் போன்ற பாரம்பரிய நெல் பெரும் வறட்சியைத் தாங்கும் தன்மைக் கொண்டதாக இருந்தது.
பாரம்பரிய நெல்லை கைவிட்டத்தின் விளைவு நாம் மட்டுமல்லாது நம்மை சுற்றி அனைத்தும் பலவீனமாகி விட்டன என்றே கூறலாம். நவீன ரக நெற்பயிரின் வைக்கோலில் சத்து இல்லாததால் அதை உண்ணும் பசுக்களுக்கு, பால் அதிகம் சுரப்பதில்லை. மண்ணின் வளமும் குன்றி விட்டது. மனிதர்களாகிய நமக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், தைராய்டு என எண்ணற்ற வியாதிகள் நம்மை ஆட்கொண்டு விட்டன.
பாரம்பரிய அரிசி, பழமையான அரிசி ரகங்களின் மதிப்பை உணர்ந்த பின் இன்று இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இன்று பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியினை தனிநபர்கள், அமைப்புகள் செய்து வருகின்றனர்.
பராம்பரிய நெல் வகைகள்
நம் நாட்டில் அன்றைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த சில பாரம்பரிய நெல் ரகங்களின் தொகுப்பு உங்களுக்காக
அன்னமழகி |
அறுபதாங்குறுவை |
பூங்கார் |
கேரளா ரகம் |
குழியடிச்சான் (குழி வெடிச்சான்) |
குள்ளங்கார் |
மைசூர்மல்லி |
குடவாழை |
காட்டுயானம் |
காட்டுப்பொன்னி |
வெள்ளைக்கார் |
மஞ்சள் பொன்னி |
கருப்புச் சீரகச்சம்பா |
கட்டிச்சம்பா |
குருவிக்கார் |
வரப்புக் குடைஞ்சான் |
குறுவைக் களஞ்சியம் |
கம்பஞ்சம்பா |
பொம்மி |
காலா நமக் |
திருப்பதிசாரம் |
அனந்தனூர் சன்னம் |
பிசினி |
வெள்ளைக் குருவிக்கார் |
விஷ்ணுபோகம் |
மொழிக்கருப்புச் சம்பா |
காட்டுச் சம்பா |
கருங்குறுவை |
தேங்காய்ப்பூச் சம்பா |
காட்டுக் குத்தாளம் |
சேலம் சம்பா |
பாசுமதி |
புழுதிச் சம்பா |
பால் குடவாழை |
வாசனை சீரகச்சம்பா |
கொசுவக் குத்தாளை |
இலுப்பைப்பூச் சம்பா |
துளசி வாச சீரகச்சம்பா |
சின்னப்பொன்னி |
வெள்ளைப்பொன்னி |
சிகப்புக் கவுனி |
கொட்டாரச் சம்பா |
சீரகச்சம்பா |
கைவிரச்சம்பா |
கந்தசாலா |
பனங்காட்டுக் குடவாழை |
சன்னச் சம்பா |
இறவைப் பாண்டி |
செம்பிளிச் சம்பா |
நவரா |
கருத்தக்கார் |
கிச்சிலிச் சம்பா |
கைவரச் சம்பா |
சேலம் சன்னா |
தூயமல்லி |
வாழைப்பூச் சம்பா |
ஆற்காடு கிச்சலி |
தங்கச்சம்பா |
நீலச்சம்பா |
மணல்வாரி |
கருடன் சம்பா |
கட்டைச் சம்பா |
ஆத்தூர் கிச்சிலி |
குந்தாவி |
சிகப்புக் குருவிக்கார் |
கூம்பாளை |
வல்லரகன் |
கௌனி |
பூவன் சம்பா |
முற்றின சன்னம் |
சண்டிக்கார் (சண்டிகார்) |
கருப்புக் கவுனி |
மாப்பிள்ளைச் சம்பா |
மடுமுழுங்கி |
ஒட்டடம் |
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments