கொரோனா போன்ற நோய்த் தொற்றுக் காலத்தில், நம் முன்னோர் மேற்கொண்ட வாழ்வியல் முறையை இனிமேல் கடைப்பிடித்தால், நோயின்றி வாழலாம்.
பதம் பார்க்கும் நோய்கள் (Term-seeing diseases)
எல்லாக் காலங்களிலும் மனிதர்களின் வாழ்க்கையை நோய்கள் பதம்பார்த்திருக்கின்றன. இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளில் காணாத ஒன்றாக நம்மில் ஆயிரக்கணக்கானோரைக் காவு வாங்கிச் சென்றது கொரோனா.
நோய்த் தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக, முகக்கவசம், சானிடைஸர் என எத்தனை பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தினாலும், 100 சதவீதம் பலன் அளிப்பதில்லை.
கொடூரக் கொரோனா தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றும் நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் வாழ்ந்து சென்ற வாழ்வியல் முறையைக் கையாள முன்வந்தால், நாமும் உயிர் பிழைப்பது எளிதானதாகவே இருக்கும்.
வாழ்வியல் முறை
வாசல் சுத்தம் (Door cleaning)
பெண்கள் வாசல் பெருக்கி, சாணம், மஞ்சள் தெளித்துக் கோலமிட்டார்கள். எதற்காகவென்றால், கிருமி பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மஞ்சளைக் கிருமி நாசினியாகப் பயன்படுத்தினார்கள்.
தீட்டு
பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைப்படுத்தினர். ஏனெனில், நுண்ணுயிர் கிருமிகளை பரவாமல் தடுத்து நிறுத்துவதற்காக.
சலூன்
சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால், எதையும் தொடாமல், குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏனென்றால், தொற்றுக் கிருமிகள் தொடராமல் இருக்கவேண்டும் என்பதற்காக.
செம்பு பாத்திரங்கள் (Copper utensils)
மண், செம்பு, வெண்கலம், ஈயம் பூசியப் பித்தளைப் பாத்திரங்களையே அதிகளவில் பயன்படுத்தினார்கள். ஏனெனில் இவை கிருமிகள் அண்டாத நோய் எதிர்ப்பு ஆற்றலை உள்ளடக்கி உள்ளன என்பதற்காக.
கொல்லைப்புறம் (Backyard)
கழிவறையையும், குளியலறையையும் வீட்டிற்குள் வைக்காமல், கொல்லைப்புறத்தில் வைத்தார்கள். ஏனெனில் கண்ணுக்குத் தெரியாதக் கிருமிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக.
செருப்பு (Sandals)
செருப்பை வீட்டின் வெளியே விடச்சொன்னார்கள். ஏனெனில் எச்சில் நரவை மூலம் கிருமிகள் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.
எண்ணெய் தேய்த்து (Rubbing oil)
பெரியவர்கள் வாரா வாரம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஏனெனில், உடல் சூட்டைத் தணித்துச் சளிக் கிருமிகளைப் போக்கி, நுரையீரலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக.
மரணம் (Death)
சாவு வீட்டில் சமைக்கக்கூடாது என்றார்கள். ஏன் தெரியுமா ? கிருமிகள் 14 நாட்கள் இறந்த வீட்டில் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவாம். இதனைக் கருத்தில் கொண்டே அவ்வாறு உரைத்தார்கள்.
வாழ்வியல் நெறி (Biology)
தனி மனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அணுகாது உறவாடுதல், போன்றவை நம் மூதாதையர்களின் வாழ்வியல் நெறி.
இதைக் கிண்டலடித்து திட்டமிட்டுச் சிதைத்ததுடன், மேலைநாட்டு நாகரீகத்தை காப்பியடித்ததால்தான், இன்று கொரோனா வைரஸ் கிருமி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நோய் அண்டாதத் தற்காப்பான பழைய வாழ்வியல் முறைக்கு நாமும் திரும்புவோம். நீண்டகாலம் நோயின்றி வாழ்வோம்.
மேலும் படிக்க...
Share your comments