தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா 2-ம் அலை (Corona 2nd wave)
இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுதொற்றுப்பரவலைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதிரடி நடவடிக்கைகள் (Action)
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஞாயிறு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிரடி நடவடிக்கைகளை அதிரடியாகக் களமிறக்கி வருகிறது.
தடுப்பூசி (Vaccine)
இது ஒருபுறம் இருக்க,கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக தடுப்பூசிப் போடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
3 தடுப்பூசி (3 vaccine)
இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
எய்ம்ஸ் ஆய்வு (Aims study)
இவை அனைத்திலும் இரு டோஸ்கள் தடுப்பூசிகளை போதிய இடைவெளியில் அவசியம் போட வேண்டும். அதே வேளையில் ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைவதாகத் தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
63 பேர் (63 people)
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டுத் தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர்.
இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், எஞ்சியர்வர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவர்.
கொரோனாத் தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது.
மரணம் இல்லை (There is no death)
பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே தடுப்பூசிப் போட்டுக்கொள்வதை, மக்கள் அனைவரும் பின்பற்றி, இந்தக் கொடிய நோயில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!
கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி!
Share your comments