1. வாழ்வும் நலமும்

சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார் சுக்கிரன் என்ன பலன் தர உள்ளார்!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Venus is going to enter Leo and what will it bring!

ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருக்கும் போது, ​​அந்த நபருக்கு சகல வசதிகளும், வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் சுக்கிரன் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆக இருக்கிறார். அதனால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிரன், ஜூலை 7 ஆம் தேதி சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்று சொல்வதுண்டு. அத்தகைய சூழ்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி, கடக ராசியில் வக்ர பெயர்ச்சி ஆகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்க உள்ளது. இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக அமையப் போகிறது. உடல் இன்பங்களின் பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பணியிடத்திலும் பதவி உயர்வு முதலியவற்றையும் காணலாம். இந்த நேரத்தில் விலையுயர்ந்த பொருளையும் வாங்கலாம். ரியல் எஸ்டேட், உணவு போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த காலகட்டம் சாதகமானது.

மேலும் படிக்க: வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஜோதிட சாஸ்திரப்படி, சிம்ம ராசியில் சுக்கிரனின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். வேலை, தொழில், வியாபாரம் என அனைத்திலும் ஆதாயம் பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் பெற புதிய வழிகள் திறக்கப்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். அதே நேரத்தில், எடுத்த அனைத்து வேலைகளிலும் நல்ல பலன்கள் காணப்படும். எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு வரலாம்.

மேலும் படிக்க:

பான்-ஆதார் இணைக்கவிட்டால்: பான் கார்டு செயல்படாது

வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

English Summary: Venus is going to enter Leo and what will it bring!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.