1. வாழ்வும் நலமும்

நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கணுமா? இதை சாப்பிடவும்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Healty diet tips

தற்போதைய காலகட்டத்தில் அதீத பசி என்பது பலருக்கு ஒரு பிரச்சனையாகவே மாறிவிட்டது. சிலருக்கு சரியாக மூன்று வேளைகள் சாப்பிட்டாலும், மீண்டும் எதையாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். இப்படி நினைப்பதை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது. சிலர் பசி எடுக்கும் போது பொரித்த உணவுகளை சாப்பிடுவார்கள். இவை எடை அதிகரிப்பு மட்டுமின்றி இதய நோய் உள்ளிட்ட பல ஆபத்தான நோய்களுக்கும் வழிவகுக்கும்.

உண்மையில், நாம் சரியாக சாப்பிட்டாலும் பசிக்கான ஹார்மோன்கள் சுரப்பது தான் அதீத பசிக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். பசியைக் கட்டுப்படுத்த, அதிக நேரம் வயிறு நிறைந்திருக்கும் வகையிலான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பாதாம்

நாள்தோறும் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுக்குள் இருப்பது மட்டுமின்றி பல உடல் நல பிரச்சனைகளும் குறையும். பாதாமில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம், வைட்டமின் ஈ, புரதம் ஆகியவையும் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, புரதம் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசி உணர்வு தூண்டாமல் நிரப்பிவிடும். பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு பசியைக் கட்டுப்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்திருக்கும்.

தேங்காய்

தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் சாப்பிடுவதால் பசி கட்டுக்குள் இருக்கும். தேங்காய் உடலில் சேரும் கொழுப்பை மிக வேகமாக கரைக்கும். அது மட்டுமின்றி பசியையும் கட்டுப்படுத்துகிறது. தேங்காய் உண்பதால் குறைந்த கலோரிகள் தான் கிடைக்கும். இது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும்.

ஆளி விதைகள்

காய்கறிகளில் தயார் செய்யும் ஜூஸ் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. இந்த ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைக்க உதவுகிறது. குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் ஒரு தேக்கரண்டி வறுத்த ஆளி விதைகளை சேர்ப்பது கூடுதல் பலன் அளிக்கும். காய்கறி சூப் அருந்துவதும் நல்லது.

மோர்

இதில் அதிக அளவு புரதம் உள்ளது. இதை பருகுவதால் உங்கள் உடல் நீரேற்றமாக இருக்கும். இது உங்கள் பசியை பெருமளவு குறைக்கிறது. மோரில் கால்சியமும் நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். புத்துணர்வாகவும், உற்சாகமாகவும் உங்களை வைத்திருக்கும். இது பசியைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொண்டைக்கடலை

முளை கட்டிய கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். பயிறுகளில் அதிகம் உள்ள புரதங்கள் மெதுவாக ஜீரணமாகும். அவ்வளவு சீக்கிரம் பசி எடுக்காது. இவை பசியை தூண்டும் ஹார்மோன் அளவைக் குறைக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளது. சாலட், பிற காய்கறிகளுடன் சாட் வடிவத்திலும் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:

உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரும்பு வாங்க ஆள் இல்லை - குமுறும் வியாபாரிகள்

English Summary: Want to stay hungry for a long time? Published on: 21 January 2023, 08:10 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.