தேநீர் என்பது நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. ஏன் நம்மில் பலருக்கு, தேநீர் பருகாமல், விடிவதே இல்லை எனலாம். ஆனால், பால் சேர்க்காத தேநீர்தான் சிறந்தது என்ற கருத்து ஒருபுறம் நிலவி வருகிறது.எனவே எந்த தேநீர் உடல் நலத்திற்கு ஏற்றது என்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. இதனை முன்வைத்து ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
பகுப்பாய்வு
இந்நிலையில், சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று டீ குடிப்பது எப்படி ஆயுளுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்படி, 40 முதல் 69 வயதுடையவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தேநீர் உட்கொள்ளல் போன்ற விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
டீ
ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேர் டீ பருகுவதை ஒப்புக்கொண்டனர். அதிலும் 89 சதவீதம் பேர் இரண்டு முதல் ஐந்து கப் வரை பால் கலக்காமல் 'பிளாக் டீ' பருகியுள்ளனர்.
மாரடைப்பு ஆபத்து
ஆய்வின்போது ஒரு நாளைக்கு இரண்டு கப் பிளாக் டீ அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அழற்சி எதிர்ப்பு
ஒரு நாளைக்கு மூன்று கப் பிளாக் டீ பருகுவதால் இறப்பு அபாயம் 12 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. ஒரு கப் பிளாக் டீயில் 2.4 கலோரிகள் மற்றும் சிறிய அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments