பழங்கள் பற்றி நினைக்கும்போதே அதன் சுவை நம் நாவை வருட ஆரம்பிக்கும். அடுத்ததாக அதன் ஆரோக்கிய நன்மைகள் நம்மை ஆட்கொள்ளும். உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஆகையால், அனைவரும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தை உண்பது மிக அவசியமாகும். குறிப்பாகக் கோடை காலமே பலாப்பழத்தை உட்கொள்ள ஏற்ற காலமாகும். அதிலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடையில் பலாப்பழத்தை சாப்பிட வேண்டியது மிக முக்கியம். ஏனெனில் அது அவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது.
தூக்கம்
தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளிலும் பலாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளது. இது உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் நரம்புகளை தளர்த்தி நன்றாக தூங்க அனுமதிக்கிறது. பலாப்பழத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் ஒருவருடைய சீரற்ற தூங்கும் பழக்கத்தை சரிசெய்ய முடியும்.
எலும்புகள் வலுவாக
பலாப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளன. இவை எலும்புகளை வலிமையாக்குகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
சர்க்கரை
பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வெளியீட்டு வேகத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிக சிரமம் இருக்காது.
நோய் எதிர்ப்புச் சக்தி
கோடை காலத்தில் பல பருவ நோய்கள் வர வாய்ப்புள்ளன. இந்த சூழ்நிலையில், பலாப்பழத்தை உட்கொண்டால், கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். ஏனெனில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் அதிகமாக பலாப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
எடை குறைய
பலாப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்தும் மிக அதிகம். பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன் உடல் எடையும் குறையும். பலாப்பழம் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க...
Share your comments