உடல் நலத்திற்கு உறுதி அளிக்கும் பல்வேறு பால்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இவற்றில் எந்தப் பால் சிறந்தது என்பதில் குழப்பம் நீடிக்கிறதா? கவலைவேண்டாம். உங்களின் குழப்பத்தை தீர்க்க மேலும் படியுங்கள்.
பால் என்பது மனித உடலுக்குத் தேவையான அதிகளவிலான சத்துக்கள் நிறைந்த பானம். பால் குடிக்கும் பழக்கம் என்பது பல வருடங்களாக உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது புதிது புதிதாக பால்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
அவ்வாறு தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுவதை, பசும்பால், பாதாம்பால், சோயா பால், ஓட்ஸ் பால், தேங்காய் பால் மற்றும் அரிசிப்பால்.
பசும்பால் (Cow milk)
இதில் மனிதனுக்கும் பசும்பாலுக்கும் இடையேயான பந்தம், பல யுகங்களும் தொடரும் பந்தமாகும். எனவே இந்தப்பாலைப் பருகும் வாடிக்கையாளர்கள் அவ்வளவு எளிதில் அதனை விட்டு வேறு பாலுக்கு மாறமாட்டார்கள்.
இவற்றை வித்தியாசப்படுத்திப் பார்க்க, அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சத்துக்கள் (Nutrients)
பசும்பாலில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின் A, B12, பாஸ்பரஸ், அயோடின், துத்தநாகச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது. பசும்பாலைத் தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு, இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பது 21 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோயா பால் (Soya Milk)
பசும்பாலுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெறுவது சோயா பால். இதில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகளவில் உள்ளன. ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில், பாதாம்பால், அரிசிப்பால் மற்றும் தேங்காய் பாலைவிட சிறந்தது சோயா பால் என்கிறது 2017ல் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள். புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றுடன் நல்லக் கொழுப்பு நிறைந்தது.
பாதாம்பால் (Badam Milk)
பாலில் இருப்பதைவிட புரோட்டீனும், கால்சியமும் பாதாம் பாலில் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவர்கள், டையட்டை (diet) பராமரிப்பதற்காக இதனை விரும்பி எடுத்துக்கொள்கின்றனர். இதில் வைட்டமின் E, மக்னீஷியம் , துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களும், நல்லக்கொழுப்பும் நிறைந்திருக்கிறது.
ஓட்ஸ் பால் (Oats Milk)
ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படும் பாலில், நார்ச்சத்து, வைட்டமின் E ஆகியவை இருப்பதுடன், பசும்பாலில் உள்ளதைவிட இருமடங்கு கார்போஹைட்ரேட்டும் இடம்பெற்றுள்ளது. இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பால் ஏற்றதல்ல.
தேங்காய் பால் (Coconut Milk)
குறைந்த அளவிலான புரோட்டீன், கார்போஹைட்ரோட் ஆகியவற்றுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழும்பும் அதிகம் நிறைந்தது தேங்காய் பால். அதேநேரத்தில் கால்சியம் சத்து இல்லாததால், ஊட்டச்சுத்து அடிப்படையில் பார்த்தால், பசும்பால் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது.
அரிசி பால் (Rice Milk)
அரிசியில் தண்ணீர் சேர்த்து எடுக்கப்படும் பாலில் இயற்கையாகவே அதிகளவில் கார்போஹைட்ரேட்டும், சர்க்கரையும் உள்ளன. அதேநேரத்தில் குளுக்கோஸின் அளவும் அதிகமான இருப்பதாகல், நீரழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
மேலும் படிக்க...
கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!
Share your comments