1. வாழ்வும் நலமும்

வாருங்கள் அனைத்து விதமான தலை முடி பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்

KJ Staff
KJ Staff
Hair Fall

தலை முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உட்கொள்ளும் உணவு முறை, பயன்படுத்தும் ஷாம்பு, சிப்பு, டவல் என அனைத்தும் முக்கிய காரணிகள் ஆகலாம். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வழுக்கை பிரச்சனை இருந்து வரும்.     

முதலில் தலை முடியில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள்

  • முடி உதிர்வு
  • நரை முடி/ இள நரை
  • வழுக்கை விழுதல்
  • புழு வெட்டு
  • அடர்த்தி இல்லாமை
  • பொடுகு தொல்லை

தலை முடி பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு என்கிறார்கள். முறையான பராமரிப்பு, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அழகான கூந்தலை தரும்.  தலை முடி   பிரச்சனைக்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்

  • புரதச்சத்துப் பற்றாக்குறை
  • இரும்புச்சத்துப் பற்றாக்குறை
  • துத்தநாகப் பற்றாக்குறை
  • ஹார்மோன் குறைபாடு
  • பாரம்பரிய வகை
Hair Loss Treatment

முடி உதிர்வதற்கான தீர்வுகள்

  • முதலில் இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • வாரம் இருமுறையெனும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். கடைகளில் விற்கும் வாசனை எண்ணெய்களை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிக்கும் போது அதன் பலன் பல மடங்காகும். அதிக அளவில் தயாரித்து வைக்காமல் ஒரு மாதத்திற்கு என்ற அளவில் தயாரித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • ஷாம்புக்களை தேர்தெடுக்கும் போது அதிக அளவு கெமிக்கல்ஸ் இல்லாதவைகளாக இருக்க வேண்டும். சிகக்காய் பயன் படுத்துவது சால சிறந்தது.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் நீங்கள் பயன்படுத்தும் சிப்பிணை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • மெல்லிய துணிகளைக் கொண்டு தலையை துவட்ட வேண்டும். இயற்கையான முறையில் உலர்த்த வேண்டும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Herbal Hair Oil

கூந்தல் தைலம் தயாரிக்கும் முறை

  • மருதாணி - 1/2 கப்
  • கறிவேப்பிலை - 1 கப்
  • வெங்காயம் - 3 - 4 (இடித்து வைத்து கொள்ளவும் )
  • வெந்தயம் - 1/4 கப்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • நெல்லிக்காய் - 1/2 கப் ( உலர்த்தியது )
  • செம்பருத்தி பூ - 3- 4 ( உலர்த்தியது )
  • நல்லெண்ணெய் - 100 மி.லி
  • தேங்காய் எண்ணெய் - 200 மி.லி

முதலில் ஒரு வாயகன்ற இரும்பு கடாயில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். சிறிது சூடானதும்  தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். முதலில் வெங்காயம் சேர்க்க வேண்டும். பின் வெந்தயம், சீரகம், உலர்ந்த நெல்லி, செம்பருத்தி பூ,  மருதாணி, கறிவேப்பிலை என ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். எந்த பொருளும் கருக கூடாது. இதை தயாரிப்பதற்கான கால அளவு 10 முதல் 15 நிமிடங்கள். இந்த எண்ணெய் அறிய பிறகு ஒரு மெல்லிய துணியினால் வடிகட்டி கண்ணாடி குடுவையில் வைத்து பயன்படுத்தலாம்.

மேல குறிப்பிட்டுள்ள தைலம் உங்களின் எல்லா விதமான பிரச்சனைக்கும் தீர்வாகும். வாரம் இருமுறை  இந்த எண்னெய் இரவு தூங்கும் முன்பு வேர்க்கால்களில் தேய்த்து மெதுவாக தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். மறுநாள் ஷாம்பு அல்லது சிக்காய் தேய்த்து குளித்து வர அனைத்து தலை முடி பிரச்சனையும் தீரும். வாருங்கள் சிக்காய் தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

Herbal Shikakai

சிக்காய் தயாரிக்கும் முறை

  • சீயக்காய் - 1 கிலோ
  • செம்பருத்திப்பூ / இலை - 50
  • பூலாங்கிழங்கு - 100 கிராம்
  • எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்) - 25
  • துளசி / வேப்பிலை (புழுவெட்டு )- கைப்பிடியளவு (உலர்த்தியது)
  • பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ
  • மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள்
  • கரிசலாங்கண்ணி இலை (முடி கருப்பாக) – 3 கப் அளவு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் வெயிலில் காய வைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். இதனை தலைக்கு தேய்த்து குளித்து வர தலை முடி பிரச்சனை படிப்படியா குறையும்.

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோம் எனலாம். இழந்த அனைத்தையும் இயற்கை கொண்டே சரி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கு கொஞ்சம் அதிகமாக நேரம் தேவைபடும். அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் கிடைக்கும். எல்லா வற்றுக்கும் மேலாக பொறுமை  மிக மிக முக்கியம். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Worring About Hair Fall: Come Let Us Put Full Stop: All Your Hair Problem Have Herbal Solution Published on: 02 August 2019, 05:41 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.