1. தோட்டக்கலை

பழப்பொருட்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி-TNAUவில் ஏற்பாடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் குறித்த 2 நாள் பயிற்சி முகாம்  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) நடைபெறவுள்ளது.

பயிற்சி முகாம் (Training camp)

இந்த 2 நாள் பயிற்சி நாளையும், நாளை மறுநாளும் (March 18 and 19)நடைபெற உள்ளது. தினமும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இதில் கீழ்கண்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegtables and fruits)

  • பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)

  • பழரசம் (Squash)

  • தயார் நிலைபானம் (Ready - to - serve beverage)

  • ஊறுகாய் (Pickles)

  • தக்காளி கெட்சப் (Tomato katchup)

  • ஊறுகனி (Candy)

  • பழப்பார் (Fruit bar)

கட்டண விபரம் (Payment details)

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 + 18% GST மட்டும் செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்.

வரைவோலை (Draft)

பயிற்சிக் கட்டணத்தைப், பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், கோயமுத்தார் -3 என்ற பெயரில் வாங்கி வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி (Address to send)

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-3 என் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-6611268 ஆகும்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

சொட்டுநீர்ப் பாசனத்தின்போது கடைப்பிடிக்க வேண்டியவை எவை?

English Summary: 2 day training on fruit preparation - organized at TNAU! Published on: 17 March 2021, 09:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.