தமிழக அரசு வழிகாட்டுதல்படி தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்டம், தாராப்புரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சந்திர கவிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தோட்டக்கலைத் துறை வாயிலாக, இந்த ஆண்டு பூங்கொத்து அமைத்தல், பூ அலங்காரம் செய்தல் சொட்டுநீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் பயன்பெறலாம். தாராப்புரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 30 நாட்களுக்கான போக்குவரத்து செலவாக நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியானது, முன்னுரிமை அடிப்படையில் முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் வரும் 15ம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து விண்ணப்பித்திடுங்கள்.
மேலும் படிக்க:
தோட்டக்கலை துறை காளான் உற்பத்திக்கு 40% வரை மானியம் அறிவிப்பு!
TNAU: சிறுதானியங்கள் வைத்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!
Share your comments