தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள், விதை, பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 9மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகளைத் திறக்கலாம் (You can open stores)
எனவேக் கடைகளைத் திறக்கலாம் என தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அ.ஜஸ்டின் தெரிவித்து உள்ளார்.
தளர்வில்லா ஊரடங்கு (Relaxing curfew)
கொரோனாப் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஏதுவாக தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளது.
வேளாண் பணிகள் (Agricultural works)
எனினும், வேளாண் பணிகள் தங்குதடையின்றி நடைபெற ஏதுவாக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதன் அடிப்படையில், தனியார் உரம், விதை, பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலை 6 மணி முதல் 9 மணி வரை (6 a.m. to 9 p.m.)
தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் அறிவுரையின்படி, திங்கள்கிழமை முதல் தளர்வில்லாத முழுப் பொது முடக்கம் அமலில் உள்ள வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து தனியார் உரம், பூச்சி மருந்து, விதை விற்பனை நிலையங்கள் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விற்பனை செய்யலாம் (Can sale)
ஆட்சியரின் அறிவுரையின் படி கொரோனாத் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகளை விற்பனை செய்யலாம்.
விவசாயம் பாதிக்கப்படக்கூடாது (Agriculture should not be affected)
கொரோனாக் காலகட்டத்திலும், விவசாயம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
Share your comments