வீட்டு தோட்டத்திற்கான இடுபொருட்களை, மானிய விலையில் பெற ஆதார் அவசியம் என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
மானிய விலையில் இடுபொருட்கள்:
தோட்டக்கலை துறை (Horticulture) வாயிலாக, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'உங்கள் வீட்டு தோட்டம் (Your home garden)' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மானிய (Subsidy) விலையில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் (Inputs) வழங்கப்படுகின்றன. விதைகள், தென்னை நார் கழிவு கட்டிகள், செடி வளர்ப்பு பைகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பின் விலை, 810 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மானிய விலையில், 510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆதார் அவசியம்:
தற்போது, சென்னையில் வீட்டு திட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் விற்பனையை, தோட்ட கலை துறையினர் துவக்கி உள்ளனர். மாதவரம் தோட்ட கலை பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட இடங்களில் விற்பனை நடந்து வருகிறது. மானியத்துடன் இடுபொருட்களை பெறுவதற்கு ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் புகைப்படம் (Photo) அவசியம் என, தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்.
வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தோட்டக்கலை துறையை அணுகி, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை சமர்ப்பித்து மானிய விலையில் இடுபொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே மாடித் தோட்டம் வைத்திருப்பார்களுக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!
Share your comments