வேலுார் அருகே, தேர்தல் தகராறில் ஐந்து ஏக்கர் கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்தது சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ராமசாமி, 45. இவருக்குச் சொந்தமாக கீழாத்துார் பகுதியில் ஐந்து ஏக்கர் தோட்டத்தில் 10 பேர் கரும்பு சாகுபடி செய்தனர். பள்ளிகொண்டா டவுன் பஞ்சாயத்து தேர்தலில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக ராமசாமி உள்ளிட்ட 10 பேர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
எரிந்த கரும்புகள்
இதனால் மற்ற வேட்பாளர்களுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2:00 மணிக்கு கரும்பு தோட்டம் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அவசரஇஅவசரமாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவர்கள் வருவதற்குள் கரும்பு தோட்டம் முற்றிலும் எரிந்து நாசமானது.
தேர்தல் தகராறு காரணமாக கரும்பு தோட்டத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது, பள்ளிகொண்டா போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments