சாகுபடியில் சாதித்து காட்டும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்குவதற்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை (Horticulture Department) வெளியிட்டுள்ளது. விவசாயத்தில், விவசாயிகளின் ஆர்வத்தை அதிகரித்து உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தோட்டக்கலை துறை இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
சாதனையாளர் விருது:
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், அதில், விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, தோட்டக்கலை பயிர்களை சாகுபடி (Cultivation) செய்து வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் (Encourage) வகையில், தமிழக அரசு, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில், தலா, 10 சாதனையாளர்களுக்கு விருது (Award) வழங்க உள்ளது என தோட்டக்கலைத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- காய்கறிகள், பழங்கள், சுவைதாளி பயிர்கள், மூலிகை அல்லது வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர்கள் சாகுபடி சாதனையாளர் விருதுகள்
- நுண்ணீர்பாசன தொழில் (Micro-irrigation industry) நுட்பத்திற்கான சாதனையாளர் விருது
- உயர் தொழில்நுட்ப சாகுபடியில் சாதனையாளர் விருது
- இயற்கை விவசாயத்திற்கான சாதனையாளர் விருது
- புதிய அல்லது தனித்துவம் மிக்க மற்றும் மாவட்டத்திற்கு உரிய தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான சாதனையாளர் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.
தகுதிகள்:
- தமிழகத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும், இதில் போட்டியிடலாம்.
- ஒரு விவசாயி வட்டார அளவில், ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகள், மாவட்ட, மாநில விருதுகளுக்கு, குழுவால் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருது பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை துறையின், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் (Application fee) செலுத்தி, ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங் களுடன் சமர்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் தொழில்நுட்ப சாதனைகளை விவசாயிகள் வெளிக்கொண்டு வந்து, பயன்பெற வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கல்லூரியில் காய்கறித் தோட்டத்தோடு, மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வை ஊட்டும் தாளாளர்!
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் உறுதி!
நடப்பு காரிஃப் பருவத்தில் நெல் கொள்முதல் உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments