சென்னையைப் பசுமையாக்கும் வகையில், அடர்வனம் அமைக்கும் திட்டத்தில், நலச்சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் இணைய வேண்டும் என, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
அடர்வனம் திட்டம் (Atarvanam project)
சென்னையை பசுமையாக்க, 1.000 இடங்களில், மியாவகி என்ற அடர்வனம் அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
2,200 மரக்கன்றுகள் (2,200 saplings)
கடந்த ஆண்டு, ஜனவரியில், அடையாறு மண்டலம், காந்தி நகரில், 20,000 சதுர அடி பரப்பளவு இடத்தில், மியாவகி திட்டம் துவங்கப் பட்டது. அங்கு, செடி, கொடி, மரங்கள் என, 39 வகையான, 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று வகைகளுக்கு ஏற்ப, 2 அடி முதல், 40 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.
கொய்யா, முருங்கை உள்ளிட்ட வை மரமாக வளர்ந்து, காய் காய்த்துள்ளன. பெரும்பாலான மரம் மற்றும் செடிகளில் பூக்கள் பூத்திருப்பதால், தேனி, வண்ணத்து பூச்சிகள் வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் குருவி, கிளி சார்ந்த சில பறவைகள், மரங்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன. மியாவகித் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா, அடையாறு அடர்வனத்தில் நடந்தது.
இவ்விழாவில் கலந்துகொண்டு சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் பேசுகையில்:
1000 இடங்களில் (1000 Places)
சென்னையைப் பசுமையாக மாற்ற, நகர் முழுதும் 1000 இடங்களில், அடர்வனம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக தற்போது 30 இடங்கள் தேர்வு செய்து, 60,000 செடி மற்றும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
நன்மைகள் (Benefits)
அடர்வனம் அமைப்பதால், ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். காற்று மாசு குறையும். சுற்று வட்டார பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கும். பறவை, சிறிய வகை பூச்சிகளின் புகலிடமாக அமையும், அடர்வனம் அமைக்க, சிலர் முன்வந்துள்ளனர்.
நலச்சங்கம், தொழில் நிறுவனங்கள், இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பூங்கா சாலை மைய பகுதி பராமரிப்புக்கும் முன்வர வேண்டும். இவை மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
சிலிண்டர் புக்கிங் செய்ய வாட்ஸ் ஆப் வசதி வந்தாச்சு!
Share your comments