விவசாயத்தை மண்ணில்லாமல் செய்தால் எப்படியிருக்கும்? என எண்ணுபவரா நீங்கள்?. அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான். ஆம். ஏரோபோநிக்ஸ் மூலம் மண்ணில்லா விவசாயம் சாத்தியமே.
விவசாயம் என்பது, நம் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. ஏனெனில் விவசாயம் இல்லையேல் நாம் உயிர்வாழ்வது இயலாத சாத்தியமில்லை. எனினும் இனி வரும் காலகட்டம் நம்மை, நமக்குத் தேவையான அரிசி, நெல், காய்கறிகள் உள்ளிட்டவற்றை, நம் வீட்டு மாடித் தோட்டத்திலும், சாகுபடி செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளிவிடும். எனவே இப்போது இருந்தே விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்வதுதான் உத்தமம்.
அந்த வகையில், நவீன தொழில்நுட்பச் சாதனங்களின் உதவியுடன், மண் இல்லாமல் விவசாயம் செய்வது தான், 'ஏரோ போநிக்ஸ்' தொழில் நுட்பம்.வளி வளர்ப்பு (aeroponics) என்பது தாவரங்களை சாதாரணமாக மண்ணில் வளர்க்காமல், மாற்றாக காற்று அல்லது மூடுபனியில் வளர்ப்பதாகும். இது நீரியல் வளர்ப்பு மற்றும் உயிரணு வளர்ப்பிலிருந்து மாறுபட்டது.
கண்காணிக்க ஆள் தேவையில்லை, நீர் பாய்ச்சுவது, ஊட்டச்சத்துகளைச் செடிகளுக்கு ஊட்டுவது என அனைத்தையும் கம்ப்யூட்டரே கவனித்து கொள்கிறது.
பசுமை குடில் (கிரீன் ஹவுஸ்) அமைத்துப் பயிரிடும் இம்முறையில், பயிர் சாகுபடி செய்ய , விதைகள் போட வேண்டிய அவசியமும் இல்லை.
பைப்களின் அனைத்தும் (All In Pipes)
-
பி.வி.சி., பைப்(PVC Pipeகளில் சிறு துளையிட்டு அதில் நாற்றுகள் பிடிப்புடன் வைக்கப்படுகின்றன. மண், கோகோ பீட், தேங்காய் நார் போன்று எதுவும் இல்லாமல்.
-
மாறாக பி.வி.சி., பைப்பின் உள்ளே வளர்ந்திருக்கும் வேர்களுக்கு, ஏரோபோநிக்ஸ் முறையில் தேவையான நீர் மற்றும் அணைத்து விதமான சத்துக்களை கம்ப்யூட்டர் உதவியுடன் தானியங்கி முறையில் தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.
-
வளர்ந்த செடிகள் கீழே சரியாமல் இருக்க, அதன் கிளைகளை நுாலால் கட்டிவிட வேண்டியது அவசியம்.
-
வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது மேற்பகுதியில் நீர் தெளித்து குளிரூட்டும் வசதியும் உண்டு.
-
அறையின் ஈரப்பதமும், தட்பவெப்ப நிலையும், கம்ப்யூட்டர் உதவியுடன் பாதுகாக்கப்படுகிறது.
வளர்ச்சி சீரானது (Growth is steady)
குறிப்பிட்ட கால இடை வெளியில், சீரான தண்ணீர் வினியோகம் இருப்பதால் அனைத்து செடிகளும் ஒரே மாதிரியாக வளர்கின்றன.
பூச்சித்தாக்குதல் இல்லை (No pests)
நோய், பூச்சி, புழு போன்று எதுவும் செடிகளை தாக்குவதில்லை.மண்ணில் காய்க்கும் செடிகளை விட வேகமாகவும் உயரமாகவும் வளர்கிறது.பயிர் செய்த வகைகள் அனைத்தும், குறைந்த நாட்களில் மிக விரைவாக அறுவடைக்குத் தயாராகி விடும். இதன் காய்களும், பழங்களும் சத்து மிகுந்தவையாக உள்ளன.
ரசாயனத் தாக்கம் இல்லை (No chemical impact)
ரசாயன படிமன் மற்றும் ரசாயன தாக்கம் இல்லாத இயற்கையான சத்து மிக்க காய்கறிகளை அறுவடை செய்து சந்தையில் அதிக லாபம் பெறலாம்.
ஆப்-சீசனிலும் விளையும் (Yields in the off-season)
ஏரோபோநிக்ஸ் முறையில் பல்வேறு விதமான காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.
'ஆப்-சீசனிலும்' அனைத்து வகையான காய்கறிகளையும் பயிர் செய்யலாம் என்பது சிறப்பு அம்சம்.
ஒருமுறை முதலீடு செய்தால், பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக சாகுபடி செய்யலாம். 25 சென்ட் / கால் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்ய 25 – 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது.
மானியம் (Subsidy)
மத்திய அரசு 25% மானியம் வழங்குகிறது, 75% வரை வங்கிக் கடன் வசதி உண்டு,
செய்த முதலீட்டை இரண்டு வருடத்தில் முழுவதும் லாபமாக திரும்ப சம்பாதித்து விடலாம்.
கால் ஏக்கர் நிலத்தில், 4 ஏக்கர் நிலத்தில் வைக்கப்படும் 20 ஆயிரம் தக்காளிச் செடியை பயிர் செய்வதோடு, ஒரு சாகுபடிக்கு 60 டன் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை தக்காளி சாகுபடி செய்து வருடத்தில் 180 டன் தக்காளியை அறுவடை செய்யலாம்.
தக்காளியின் பண்ணை விற்பனை விலை கிலோவிற்கு ரூ10 என்று கணக்கு இட்டால் மூன்று முறை தக்காளி சாகுபடி செய்து கிடைத்த 180 டன் தக்காளியின் மொத்த லாபம் ரூ.18 லட்சம். உற்பத்தி செலவு ரூ.5 லட்சம் என்று கணக்கிட்டால். மீதம் ரூ.13 லட்சம் நிகர லாபம். அதாவது 50%ற்கும் அதிகமாக முதல் வருடத்திலேயே லாபம் அடைந்து விடலாம்.
வருடத்தில் அதிகபட்சமாக 6 முறை வரை தக்காளி சாகுபடி செய்யலாம். தக்காளி , கீரை முதல் அனைத்து வகையான காய்கறிகள், ஏற்றுமதி செய்யபடுகின்ற மலர்கள், முலிகைகளையும் இம்முறையில் பயிர் செய்து லாபம் அடையலாம்.பராமரிப்புக்காக இரண்டு நபர்கள் மட்டுமே தேவைப்படுவர். அதனால் விவசாயப் பணியாளர்கள் குறைவாக உள்ள தற்போதைய சூழலுக்கு இத்தொழில்நுட்பம் மிக நன்றாக கைகொடுக்கும்.
இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் பல வருடங்களாக இந்த தொழில் நுட்பம் மிகவும் லாபகரமாக பயன்பாட்டில் உள்ளது.
ஏரோபோநிக்ஸ் நன்மைகள் (Benefits of Aerophonics)
-
மிகக் குறைந்த இடம்
-
மிகக் குறைந்த தண்ணீர்
-
மிகக் குறைந்த நேர கவனிப்பு
-
மிகக் குறைந்த உடல் உழைப்பு
-
மிகக் குறைந்த உற்பத்தி செலவு
மேலும் படிக்க...
Share your comments