ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேளாண் எந்திரங்கள் (Agricultural machinery)
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:-
வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
முன்பதிவு (Booking)
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தின் மூலம் டி.பி.டி. வழி முறைகளின் படி மானியம் பெறலாம்.
Rs.40 லட்சம் ஒதுக்கீடு
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக ரூ.40 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 50 எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
மறு விண்ணப்பம் அவசியம்
2020-2021-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்று கொள்ளப்படமாட்டாது. எனவே இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய அரசின்
www.agrimachinery.nic.in என்ற இணையதளம் மூலமாக புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்.
2 எந்திரங்கள் (2 machines)
விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தேர்வு செய்துப் பயன் பெறலாம். ஒரு நிதி ஆண்டில் விவசாயிகள் தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் பெற இயலும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு (After 10 years)
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு 0424-2270067 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அக்ரி கிளினிக் தொடங்க ரூ.1லட்சம் மானியம்- அருமையான வாய்ப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் கார்த்திக்!
Share your comments