தஞ்சையில் குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இடுபொருள் மானியம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்டத்தின் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:-
குறுவைச் சாகுபடி (Cultivation of Kuruvai)
பேராவூரணி வட்டாரத்தில் குறுவைச் சாகுபடி நடவுக்கு நாற்றங்கால் மற்றும் நடவுப்பணித் தயாராகி வருகிறது.
ஆன்லைனில் விண்ணப்பம் (Apply online)
குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மானியம் பெற இணையவழியில் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் வந்து பதிவு செய்தும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
50% மானிய விலையில் (50% at a subsidized price)
-
குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விதை கிராமத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
-
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்குக் குறைவான நெல் ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10ம், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரையிலானப் பரப்பிற்கு விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.
பசுந்தாள் உர விதைகள் (Green manure seeds)
மேலும் இத்திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள் ஒரு ஏக்கர் பரப்பிற்கு 20 கிலோ வரை வழங்கப்பட உள்ளது. ரசாயன உரங்கள் ஒரு ஏக்கருக்கு யூரியா 90 கிலோ, டிஏபி உரம் 50 கிலோ மற்றும் முரயேட் ஆப் பொட்டாஷ் 25கிலோ என்ற அளவில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் வரை இலவசமாகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
ஆவணங்கள் (Documents)
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு மானியம் பெற சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் எண் நகல் ஆகிய ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நேரிலும் சமர்ப்பிக்கலாம் (Can be submitted in person)
அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தத் தொகுதி வேளாண்மை விரிவாக்க அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுப் பயனடையலாம்.
மேலும் படிக்க...
உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?
Share your comments