அதிக மகசூல் பெற அறிவுரை விவசாயிகள் நுண்ணுயிர்ப் பாசனம் மூலம் குறைந்த நீரைக்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
குறை தீர்ப்புக்கூட்டம் (Meeting)
கிருணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசுகையில்,
மழை அளவு (Rain Recorded)
இந்த மாவட்டத்தில் இதுவரை 21 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் டிசம்பர் 2020 வரையில் 118,073 ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானியப் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாகுபடி பரப்பு (Cultivation area)
இதில் நடப்பாண்டில் நெல் 20 ஆயிரத்து 248 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 45 ஆயிரத்து 31 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 52 ஆயிரத்து 794 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துப் பயிர்கள் 16 ஆயிரத்து 444 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 60.28 மெட்ரிக் டன், ராகி 40.98 மெட்ரிக் டன், தட்டைப் பயறு 146 மெட்ரிக் டன், கொள்ளு 8.20 மெட்ரிக் டன், நிலக்கடலை 40.23 மெட்ரிக் டன் விதைகள் இருப்பில் உள்ளன.
குறைந்த நீரில் அதிக மகசூல் (High yield in low water)
விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயனடைய வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் ஏதேனும் நோய்த் தாக்குதல் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரியப் பயிர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!
பயிர்களைப் பாதுகாக்க உதவும் சூரிய சக்தி மின்வேலி- 50% மானியம் தருகிறது அரசு!
Share your comments