மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைச் சாகுபடி, விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி,தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சி.பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
சட்டப்படி குற்றம் (Crime under the law)
மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப் படாத களைக்கொல்லி எதிர்ப்புச் சக்தியுடைய மரபணு மாற்றம் செய்த (எச்.ஏ பருத்தி விதைகளை சாகுபடி மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
பருத்தி சாகுபடி (Cotton cultivation)
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பி.டி. ரக விதைகள் (B.D. Varieties of seeds)
இன்னும் ஒரு மாதத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருத்தி சாகுபடி பருவம் ஆரம்பிக்க உள்ள நிலையில் காய் புழுக்கள் எதிர்ப்பு சக்தியுடைய பி.டி. ரக பருத்தி விதைகளை மட்டும் சாகுபடி, விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விதை மாதிரி (Seed sample)
விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப் பட்டு, மாவட்டத்துக்கு வரும் அனைத்து நிறுவனங்களின் பருத்தி விதைகளில் அனைத்து குவியல் விதைகளும் விதை மாதிரி எடுக்கப்படுகிறது.
முளைப்புத் திறன் பரிசோதனை (Germination test)
பின்னர் முளைப்புத் திறன், அகத்தூய்மை ஆகிய சோதனைகளும் செய்யப்படுகின்றன. இருப்பினும் தமிழகத்திலும் களைக் கொல்லி மரபணு மாற்றம் செய்யப் பட்டதா என்பதை அறிவதற்கு மகாராஷ்டிர ஆய்வகத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.
உரிமம் ரத்து (License revoked)
இவ்வாறு மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உடைய பருத்தி விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்திருந்தாலோ அந்த நிலையங்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப் படுவதுடன் நீதிமன்ற வழக்கும் தொடரப்படும்.
சாகுபடி செய்த விவசாயிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பயிரிடுவதற்கு முன் பயிரின் விலை மற்றும் தேவை அறியப்படும்
ஜூலை தொடக்கத்தில் இந்த 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கன மழை - வானிலை மையம்!!
Share your comments