விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், மானிய விலையில் உயிர் உரங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் உரங்கள் (Bio-fertilizers)
இராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் நோக்கில் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது 700 எக்டேர் பரப்பில் ஏழு நில தொகுப்புகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன உழவு முறைகள், உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 50 சத மானியத்தில் கேழ்வரகு, குதிரைவாலி, எள் விதைகள்மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் வழங்கப்படும்.
ரூ. 500 மானியம் (Rs. 500 grant)
மேலும் சிறு தானியங்கள், எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் கோடை உழவுசெய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 500 மானியம் வழங்கப்படும்.
இதில் தேத்தங்கால், பெருங்களூர், பந்தப்பனேந்தல், வல்லம், கங்கைகொண்டான், ராதாப்புளி, எஸ்.வி. மங்கலம் ஆகிய பகுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்மைகள் (Benefits)
-
உயிர் உரம் ஒரு வாழும் பொருள் என்பதால் அவை தாவர வேர்களுடன் இனிய வழியில் இணைய முடியும்.
-
ஈடுபட்டிருக்கும் நுண்ணுயிரிகள் உடனடியாகவும், பாதுகாப்பாகவும் சிக்கலான கரிம பொருட்களை எளிய கலவைகளாக மாற்றிவிடும்.
-
இதனால் தாவரங்கள் இவற்றை எளிதில் எடுத்து கொள்ளும்.
-
நுண்ணுயிரி செயல்பாட்டின் கால அவகாசம் மிக அதிகம், இதனால் மண் வளம் அதிகரிக்கும்.
-
அது மண்ணின் இயற்கை வாழ்விடத்தை பராமரிக்கிறது.
-
இது பயிர் விளைவை 20-30%மாக அதிகரித்து. ரசாயன நைட்ரஜன், மற்றும் பாஸ்பரஸ்ஸை, 25% குறைத்து, தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது.
விலை மிகக் குறைவு (The price is very low)
இதனால் வறட்சி மற்றும் சில மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடும். உயிர் உரங்கள் ரசாயன உரங்களைக் காட்டிலும் விலை குறைந்தவை.
இவைகளின் உற்பத்தி விலை, குறிப்பாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்ஸின் பயன்பாட்டை குறித்து, குறைவாக இருக்கின்றது.
மேலும் படிக்க...
Share your comments