1. தோட்டக்கலை

பயோ ஸ்டிமுலண்ட்ஸ் நிறுவனங்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Bio Stimulants Companies Can Apply For Certification!
Credit : Suminter

இயற்கை விவசாயத்தில், பயிர்களின் செயல்திறனைத் தூண்டக் கூடிய இயற்கை முறையில் கிடைக்கும் மூல ஆதாரங்கள் இருக்கின்றன.

முக்கியப் பங்கு (Important role)

அவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் (Bio Stimulants) என்ற பொருட்கள் பயிர் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.

வழிகாட்டுதல்கள் இல்லை (No guidelines)

கடந்த காலங்களில் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்கு வழிமுறைகள் இல்லை.

விருப்பத்திற்கு ஏற்ப (At will)

இந்தக் காரணத்தினால் பயோ ஸ்டிமுலண்ட்ஸ் தயாரிக்கும் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், விவசாயிகளின் தேவைக்கேற்ப அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு கடற்பாசி சாறு, க்யூமிக் அமிலம், பல்விக் அமிலம், அமினோ அமிலம் போன்ற பொருட்களைக் கொண்டு கலவைகளாகவோ, தனியாகவோத் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர்.

சட்டம் திருத்தியமைப்பு (Law Amendment)

தற்போது விவசாயிகளுக்குத் தரமான பயோ ஸ்டிமுலண்ட்ஸ் வழங்கும் பொருட்டு அண்மையில்  மத்திய அரசு உரக் கட்டுப்பாடுச் சட்டம் 1985ஐ திருத்தியமைத்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் குறிப்பின்படி பயோ ஸ்டிமுலண்ட்ஸ் அனைத்தும் உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985ன் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது.

தெளிவான விளக்கங்கள் (Clear explanations)

பயோ ஸ்டிமுலண்ட்ஸ் உற்பத்திக்கு உரிமம் பெறுவது, விற்பனை செய்வது, அதில் கலந்துள்ள பொருட்கள் குறித்து, தரத்தினை உறுதி செய்ய, மாதிரி எடுப்பது போன்று பல தெளிவான விளக்கங்களுடன் ஆணை பெறப்பட்டுள்ளது.

சான்றிதழ் பெற (To obtain certification)

பயோ ஸ்டிமுலண்ட்ஸ் தயாரிப்பாளர்கள் தற்காலிக சான்று பெறுவதற்கு படிவம் G-1 ல் கீழ்காணும் விபரங்களுடன் உரக் கட்டுப்பாட்டாளர், நியூ தில்லி (The Controller of Fertilizer, New Delhi) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

1. தயாரிப்பு விபரங்கள், லேபிள், இதர விபரங்கள்
2. படிவம் G-2ல் மாநில அரசு வழங்கிய சான்றிதழ்
விண்ணப்பம் செய்ய 22.08.2021ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு (Contact)

ஆகவே, பயோ ஸ்டிமுலண்ட்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் அனைவரும் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்/வேளாண்மை அலுவலர்/உர ஆய்வாளர்கள் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அவர்களைத் தொடர்பு கொண்டு தற்காலிக சான்று பெறுவது மற்றும் விற்பனை செய்வது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தகவல்

வேளாண்மை இணை இயக்குநர்

மதுரை மாவட்டம்.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!

 

English Summary: Bio Stimulants Companies Can Apply For Certification! Published on: 19 May 2021, 07:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.