தேவையற்ற இடங்களில் வளரும் மரங்களை வேறொரு இடத்தில் நட்டுத் துளிர்க்க வைக்க பர்லாபிங் முறை கைகொடுக்கும்.
வயதான மரங்கள் (Aging trees)
பொதுவாகத் தேவையற்ற இடங்களில் வளர்ந்துள்ள வயதான மரங்களை, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இதனால், அந்த மரத்தின் பலனை நாம் முழுமையாகப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பர்லாபிங் முறை பெரிதும் உதவுகிறது.
பர்லாபிங் முறை (Burlapping method)
தேவையற்ற இடங்களில் இருக்கும் வேப்பமரம் உள்ளிட்ட நமக்குப் பலன் தரும் மரங்களை வெட்டி விடாமல் வேருடன் மற்றொரு இடத்தில், நட்டுவைத்துத் துளிர்க்க செய்யும் முறைக்கு பர்லாபிங் என்றுப் பெயர்.
செய்முறை
இந்த முறைப்படி மரத்தின் சிறுக் கிளைகளை வெட்டிவிட வேண்டும். பின்னர் தண்டில் இருந்து நீராவி போக்கினை தடுக்கும் வகையில், மருந்துகள் இட்டு அதன் மேல் வைக்கோல் வைத்து சணல் சாக்குப்பைகளால் மூடிஈரப்பதத்துடன் வெட்டி பகுதியில் கட்டப்படவேண்டும்.
அதன் பின்னர் ஆணிவேரை பாதிக்காமல் பக்கவாட்டில் உள்ள வேர்களை மட்டும் வெட்டி, மரத்தின் வேர்ப்பந்தோடு, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எடுத்து மறுபடியும் எந்த இடத்தில் நட விரும்புகிறோமோ அந்த இடத்தில் நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மரங்கள்10-20 நாட்களில் எளிதில் மீண்டும் துளிர் விடும்.
வேர்களைச் சுற்றி ஈரப்பதம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மரங்களுக்கு மறுவாழ்வு (Rehabilitation of trees)
தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். இந்த நடைமுறை தற்போது எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுவதால், தேவையின்றி மரங்கள் வெட்டப்படும் சூழல் தவிர்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் மரங்களுக்கு மறு வாழ்வும் கிடைக்கிறது.இந்த முறையில் எளிதாக மரங்களை மற்றொரு இடத்தில் மாற்ற முடியும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
Share your comments