1. தோட்டக்கலை

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!

Daisy Rose Mary
Daisy Rose Mary

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் 500 பாரம்பரிய மரவகைகள் கொண்ட இயற்கை தோட்டம் அமைக்கும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி (Chennai Corporation) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் சென்னையைச் சேர்ந்த ஆர்.எம்.அழகப்பா செட்டியார், செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான 33.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தானமாக வழங்கினார். இதில் 3.000 சதுர அடி பரப்பளவில் 2016-ம் ஆண்டு தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைத் தோட்டம்

தற்பொழுது மீதமுள்ள இடத்தை ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்து பாதுகாப்புடன் பராமரிக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சியால் பாரம்பரிய மர வகைகளான மா, பலா, வாழை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, சீதா, நாவல், அத்தி, வில்வம், இலந்தை, கொடுக்காபுளி, பப்பாளி, முருங்கை, தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10,000 மரங்கள் கொண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே மியாவாக்கி (Miyawaki) எனும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வளசரவாக்கம் மண்டலம், பகுதி - 34 கோட்டம்-155ல் ராயலா நகர் 2-வது பிரதான சாலையில் 10,000 சதுர அடி கொண்ட இந்நிலத்தில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற காடுகளினால் நகர்ப்புற மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மையை மேம்படுத்தும் சூழ்நிலையும், நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்கள் மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

 

500 பாரம்பரிய மரவகைகள்

அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் ஆணையர் பிரகாஷ், முதற்கட்டமாக 500 பாரம்பரிய மரவகைகளை நட்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!

English Summary: Chennai Corporation set up a Miyawaki forest in Madambakkam in Chengalpattu district to create green spaces Published on: 21 October 2020, 11:32 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.