தென்னை மரங்களைப் பொருத்தவரை, வெள்ளை ஈக்கள் எனப்படும் வெள்ளை சுருள் பூச்சித் தாக்குதல் அண்மைக்காலமாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.
பாதிக்கப்படும் பயிர்கள் (Affected crops)
இதன் தாக்கம் தென்னையில் பெருமளவு மகசூலை குறைத்திருக்குகிறது. தென்னை மட்டுமின்றி வாழை மற்றும் சப்போட்டா போன்ற பழப்பயிர்களையும் தாக்குகிறது.
தாக்குவது எப்படி? (How to attack?)
-
இந்த வெள்ளை சுருள் பூச்சி தென்னை ஓலைகளில் பரவி வேகமாக இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன.
-
பின்னர் தென்னை மரம் முழுவதும் பரவி ஓலையில் உள்ள சாற்றினை உறிஞ்சி ஒரு மெழுகு ஒரு தேன் திரவத்தை வெளியிடுகின்றன.
-
இது மட்டை முழுவதும் பரவி அதன் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணமாகப் படா்கிறது.
-
இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறாமல் மரத்தின் சத்துக்கள் குறைவதுடன் தேங்காயின் அளவு மற்றும் தரம் குறைந்து மகசூலும் குறைகிறது.
-
இந்தப் பூச்சி பெரும்பாலும் குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களை அதிகம் தாக்குகிறது.
கிரைசோபெர்லா இரை விழுங்கி (Chrysoperla swallows prey)
இந்த சமயத்தில் இந்த உயிரியல் முறை கட்டுப்பாடு மட்டுமே சிறந்தப் பலன்களை தருகிறது.
அழிக்கச் சிறந்த வழி (The best way to destroy)
-
இதன் தாள்களை ஸ்டாப்லர் பின் (Stapler pin)வைத்து தென்னை ஓலையில் பின் செய்துவிட வேண்டும்.
-
அவ்வாறு செய்துவிட்டால் மூன்றே நாட்களில் பொரித்து பெருமளவு இனப்பெருக்கம் செய்து வெள்ளை சுருள் பூச்சிகளை அழித்துவிடும்.
கிடைக்கும் இடங்கள் (Available places)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் பிரிவில் கிரைசோபெர்லா முட்டைகள் தயார் நிலையில் உள்ளன.இவற்றை வாங்கி ஒரு ஹெக்டேருக்கு 1,000 முட்டைகள் என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.1 ஹெக்டேருக்கான கிரைசோபெர்லா முட்டைகளின் விலை ரூ. 300 மட்டுமே.
முட்டைகள் தேவைப்படும் விவசாயிகள் 9594939508 என்ற எண்ணிற்கு Dr.செல்வராஜ் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் Dr.சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிற பயிர்களுக்கும் (For other crops)
இந்த கிரைசோபெர்லா முட்டைகளைத் தென்னை மரங்கள் மட்டுமின்றி, மற்ற எல்லாப் பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்களையும் அழித்து துவம்சம் செய்யப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க...
தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!
வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!
Share your comments