1. தோட்டக்கலை

டிஏபி உரத்திற்கு பதிலாகக் காம்ளக்ஸ் உரங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Complex fertilizers instead of DAP fertilizer!
Credit : IndiaMART

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஎபி உரத்திற்கு பதிலான காம்பக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சம்பா சாகுபடி (Samba cultivation)

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.சம்பா பருவத்திற்குத் தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கையிருப்பு (Stock)

தற்போது மாவட்டத்தில் 2922 மெட்ரிக் டன் யூரியா, 629 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 768 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 2691 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்திற்கு காம்ளக்ஸ் (20:20:0:13) உரங்கள் தூத்துக்குடியில் இருந்து 751 மெட்ரிக் டன்கள் பெறப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்களுக்கு (For fertilizer vendors)

  • மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.

  • உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும்.

  • உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

  • விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய இரசீது வழங்க வேண்டும்.

  • உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)

  • மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவைக் குறைக்கலாம்.

  • விவசாயிகள் டிஏபி க்கு பதிலாக காம்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்தலாம்.

  • உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும்.

  • உரம் வாங்கும் போது இரசீது தவறாமல் கேட்டுப் பெறவேண்டும்.

புகார் அளிக்க (To complain)

உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உரம் கண்காணிப்பு மையத்தினை 04322 221666 அல்லது 90807 09899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

English Summary: Complex fertilizers instead of DAP fertilizer! Published on: 17 October 2021, 08:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.