அகத்தை உடலின் உட்புறத்தை சீரக்குவதன் காரணமாகவே சீரகம் என்று அழைக்கப்படுகிறது. வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
இயந்திர மயமாகிவிட்ட வாழ்க்கை, பணிச்சுமை இதற்கிடையே கொரோனா நெருக்கடியால், வீட்டில் இருந்தபடி பல மணிநேரம் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் போன்றவற்றால், நம்மில் பலருக்கு செரிமானக்கோளாறும், அல்சரும் தீராதப் பிரச்னையாக மாறிவிட்டன. இந்த பிரச்சனையில் இருந்த நிரந்திரமாக விடுதலை பெற சீரகத்தைத் தவறாது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சீரகம் சாகுபடி (Cultivation)
மருத்துவ மூலிகையான சீரகம், ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்கு வளரும்.
பருவம் (Season)
மலைப்பகுதிகளுக்கு: மே – ஜூன் மாதங்கள்
சமவெளிப்பகுதிகளுக்கு: அக்டோபர்- நவம்பர் அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விதைப்பு (Sowing)
நேரடி விதைப்பதற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை. தேவைக்கேற்ப மேடைப்பாத்திகள் அமைத்து, விதைகளை பாத்திகளின் மேல் சீராகத்தூவி, கைக்கொத்தியால் மண்ணுடன் நன்கு கலக்கச்செய்ய வேண்டும். விதைகள் முளைக்க 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
நடவு
5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 து 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
ஊட்டச்சத்து (Fertilizers)
அடியுரமாக ஹெக்டேருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். செடிகள் பூ விடும் தருணத்தில் இயற்கை ஊக்கிகளை தெளிக்க வேண்டும் அடியுரமாக குப்பை இடவேண்டும்
களைக்கட்டுப்பாடு (Pest Control)
களைகள் மூன்று முறை கைக்களை எடுக்க வேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண்ணைக்க வேண்டும்
அறுவடை (Harvesting)
பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துகளை அறுவடை செய்ய வேண்டும். பின் இவற்றை வெயிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
மகசூல்: ஹெக்டேரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.
சீரகத்தில் மருத்துவப்பயன்கள் (Medical Benefits)
-
தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
-
கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
-
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.
-
செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும்.
-
சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம்.
-
உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.
-
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும்.
-
சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும்.
-
சளியைக் குணப்படுத்தவும் உதவும்
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
PMKSY : 100% மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
விதை உற்பத்திக்கு மானியம் பெற அழைப்பு - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
Share your comments