கோவையில் கால்நடைத் தீவனங்களுக்கான கே 12 ரக சோளம் விதை மானியத்தில் வழங்கப்படுகிறது.
புரட்டாசிப் பட்ட விதைப்பு
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்தில், மானாவாரி மற்றும் நீர்பாசன விவசாயிகளுக்கு, புரட்டாசி பட்ட விதைப்புக்கு, 'கே 12' ரக சோளம் விதை, மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
சோளம் சாகுபடி (Cultivation of corn)
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை சாகுபடிக்கு இடையே, வாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசனமுள்ள பகுதிகளில், தக்காளி, பச்சைமிளகாய், கத்தரிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இப்பகுதியில் உள்ள மானாவாரி நிலத்தில், கால்நடைகளுக்கு தேவையான சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப் படுகிறது.
கே 12' ரக சோளம் (K12 'type maize)
கிணத்துக்கடவு பகுதியில், கூடுதல் தானியம் மற்றும் கால்நடை தீவனத்துக்காக 'கே 12' ரக சோளம் விதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வட்டார வேளாண் துணை இயக்குனர் மோகன சுந்தரம் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில், 'கே 12' என்ற நெட்டை ரக விதைப்பு சோளம், 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 95 நாட்ளில் இச்சோளத்தை அறுவடை செய்யலாம்.
தாங்கி வளரும் தன்மை (Bearing capacity)
மானாவாரியில், ஏக்கருக்கு, 450 கிலோ தானியமும், 10 டன் தீவனத்துக்கு சோளத்தட்டையும் கிடைக்கிறது. குருத்து ஈ, தண்டு துளைப்பான் பூச்சிகளையும், அடிசாம்பல் நோயையும் எதிர்த்து, தாங்கி வளரும் பயிராகும்.
திரவ நுண்ணூட்டம் (Liquid micronutrients)
இந்தத் தானியம், கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க மையத்தில், 50 சதவீத மானியத்தில், கிலோ, 35 - 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இத்துடன், நுண்ணாட்டம் மற்றும் திரவ நுண்ணூட்டமும், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!
Share your comments