இயற்கையோடு இணைந்த வாழ்வில், மண்வாசனையோடு, மணக்க மணக்கச் சமைத்த உணவை சாப்பிட்டபோது, மனிதம் மனிதநேயம் மிக்கவனாக, மற்ற உயிர்கள் மீது அன்பு மற்றும் பரிவு காட்டுபவராக இருந்தார்கள்.
பாரம்பரிய விதைகள் (Traditional Seeds)
அதிலும், விவசாயத்தை உயிராக கருதும் நம் நாட்டில் முன்பெல்லாம் பாரம்பரிய நாட்டு விதைகளைக் கொண்டே பயிரிட்டனர்.
அதனால் தான் நம்முடைய மூதாதையர் 90 வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள். அடுத்த தலைமுறையான நமது தந்தையர் சராசரியாக 70 வயது வரை வாழ்ந்தார்கள்.
குறைந்த ஆயுள் (Low life)
அதற்கு மாறாக, நம் தலைமுறையில் சிறிய வயதுடையோரும் திடீரென இறந்து விடுகிறார்கள். இதற்கு காரணம், நாம் உண்ணும் உணவின் தரமும் உணவு முறை பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளுமே.
ஆக தரமான உணவுகளை உண்பதும், நாட்டுக்காய்கறிகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதும், நம்முடைய ஆயுளை நீடிக்கச் செய்யும் சூட்சமங்கள்.
நாட்டுக்காய்கறிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதில் குழப்பமா? குழப்பமேத் தேவையில்லை. ஏனெனில், காய் என முடிவதெல்லாமே நாட்டுக்காய்கறி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பாரம்பரிய நாட்டுக் காய்கறிகள்(Traditional country vegetables)
வெண்டைக் காய்
சிவப்பு வெண்டை
பருமன் வெண்டை
மர வெண்டை
பல கிளை சிவப்பு வெண்டை
மலை வெண்டை
யானைதந்த வெண்டை
பச்சை பலகிளை வெண்டை
காபி வெண்டை
துறையூர் வெண்டை
விருதுநகர் சுனை வெண்டை
கஸ்தூரி வெண்டை
அவரைக்காய் (Pea)
கோழி அவரை (ஊதா)
கோழி அவரை ( பச்சை)
ஊதா ஓர கொம்பு அவரை
பச்சை பட்டை அவரை
மூக்குத்தி அவரை
சிறகு அவரை
தம்பட்டை அவரை (செடி,கொடி)
வாள் அவரை
ஊதா அவரை
ஊதா ஓர பட்டை அவரை
இலாட அவரை (3 வகைகள்)
பட்டானி அவரை
யானை காது காது அவரை
செடி அவரை
பூனைக்காலி (கருப்பு வெள்ளை)
மொச்சை
கத்தரிக்காய் (Eggplant)
கொட்டாம்பட்டி கத்தரிக்காய்
வெள்ளை கத்தரிக்காய்
ஊதா கத்தரிக்காய்
வேலூர் முள் கத்தரிக்காய்
தொப்பி கத்தரிக்காய் பச்சை
திருப்பூர் கத்தரிக்காய்
மணப்பாறை ஊதா கத்தரி
கண்டங்கத்திரி
பவானி கத்தரிக்காய்
கல்லம்பட்டி கத்தரிக்காய்
கம்மா கத்தரிக்காய்
உடுமலை சம்பா கத்தரிக்காய்
புழுதி கத்தரிக்காய்
குலசை கத்தரிக்காய்
வளுதுணை கத்தரிக்காய்
பீர்க்கங்காய்
குட்டை பீர்க்கன்
நீட்டு பீர்க்கன்
நுரை பீர்க்கன் (வெள்ளை)
நுரை பீர்க்கன் (கருப்பு )
சித்திரை பீர்க்கன்
குண்டு பீர்க்கன்
குட்டி குண்டு நுரை பீர்க்கன்
ஆந்திரா குட்டி பீர்க்கன்
உறுதி பீர்க்கன்
சுரைக்காய் (Zucchini)
சட்டி சுரைக்காய்
நீட்டு சுரைக்காய்
கும்ப சுரைக்காய்
குடுவை சுரைக்காய்
வரி சுரைக்காய்
நாமக்கல் கரும் பச்சை சுரை
யானைக் கால் சுரை
பானை சுரை பெரியது
நீச்சல் சுரை
5 அடி சுரை
கதை சுரை
ஆட்டுக்கால் சுரை
வாத்து சுரை
தோண்டி சுரை
பரங்கி சுரை
பரங்கிக்காய் (Pumpkin)
8 கிலோ பரங்கிக்காய்
வெள்ளை பரங்கி
குடுவை பரங்கி
2 கிலோ பரங்கி
தலையணை பரங்கி
ஆரஞ்சு நிற பரங்கி
பொள்ளாச்சி பரங்கி
பூசணிக்காய்
வெண் பூசணி (உருட்டு)
வெண் பூசணி (கேரளா ரகம்)
பாகற்காய்
நீட்டு பாகற்காய்
மிதி பாகற்காய்
கீரைகள் (Greens)
புளிச்சக் கீரை பச்சை
புளிச்சக் கீரை சிகப்பு
தண்டு கீரை பச்சை
அரக்கீரை
மனத்தக்காளி கீரை
மேலும் படிக்க...
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
Share your comments