1. தோட்டக்கலை

மரக்கன்று வளர்க்க விரும்பும் விவசாயியா? அரசு தருகிறது மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Farmer who wants to grow sapling? Government gives subsidy!
Credit : Maalaimalar

நம் வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான அனைத்துக் காலகட்டத்திலும், மரம் இன்றியமையாததாக உள்ளது.

மரம் வளர்ப்பு

இதை உணர்த்தும் வகையில், மரம் நடுவோம், மழை பெறுவோம், வாழ்வில் வளம்பெறுவோம் என்ற வாசகம் நம்மில் பலருக்கு பரிட்சயப்பட்ட ஒன்று. இருப்பினும், அதற்கென இடம் ஒதுக்கீடு செய்தல், பராமரிக்கும் செலவு என சிலக் காரணிகளைக் கருத்தில்கொண்டு, யாரும் முன்வருவதில்லை.

உன்னதப் பணி

ஆனால் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அவர் வழியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விக்ரம் ஆகியோர் பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு நம் சுவாசத்திற்கு வித்திட்டுச் சென்றனர்.

விவசாயிகளுக்கு இலவசம் (Free for farmers)

எனவே இந்தப் புன்னியப்பாதையில், மரம் வளர்க்க விரும்பும் விவசாயியா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குதான்.

தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் ரூ.28.39 லட்சம் மதிப்பில் 1,89,300 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இக்கன்றுகளை வனத்துறை நாற்றாங்காலில் இருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு மானியம்? (How much subsidy?)

  • வரப்பு நடவுக்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்கள் என்றால் 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும்.

  • பராமரிப்பு ஊக்கத் தொகையாக ஒரு கன்றுக்கு ஆண்டுக்கு ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

  • எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக உங்கள் அருகில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

தகவல்
தேனி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

தாயுள்ளத்தை வெளிப்படுத்திய சிங்கப்பெண்- முதல்வர் பாராட்டு!

அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!

English Summary: Farmer who wants to grow sapling? Government gives subsidy! Published on: 13 November 2021, 07:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.