1. தோட்டக்கலை

காய்கறி விவசாயிகளுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
For vegetable growers Rs 5,000 Incentive

Credit : WebMD

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தக் காய்கறி விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி சாகுபடி (Vegetable cultivation)

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில், 350க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தோட்டக்கலை துறையின் சார்பில், ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து திருத்தணி தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி கூறியதாவது :

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் மட்டும் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும், இரண்டரை ஏக்கருக்கு, ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

நாற்றுகள் இலவசம் (Seedlings are free)

ஒரு விவசாயி, அதிகபட்சம் 5 ஏக்கர் வரை ஊக்கத்தொகை பெறலாம். முருங்கை, கத்திரி, மிளகாய் போன்ற காய்கறி நாற்றுகளை விவசாயிகள் இலவசமாகப் பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • சிட்டா

  • அடங்கல்

  • ரேன் கார்டு

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2.

  • ஆதார் கார்டு,

  • வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்

ஊக்கத்தொகை மற்றும் நாற்றுகள் பெற விவசாயிகள், மேற்கூறிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புக்கு (Contact)

கூடுதல் விபரங்களுக்கு, திருத்தணி குறு வட்டத்திற்கு, 98940 95576, செருக்கனூர் குறு வட்டத்திற்கு, 80727 85725 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

விளைநிலங்களை உருவாக்க ரெடியா?- ஹெக்டேருக்கு ரூ. 22,800 வரை மானியம்!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: For vegetable growers Rs 5,000 Incentive

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.