1. தோட்டக்கலை

காய்கறி பயிர்களுக்கு இலவச இடுபொருள் - விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Free Input for Vegetable Crops - Call for Farmers!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த காய்கறி விவசாயிகளுக்கு முழு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6,000 மதிப்புள்ள (Worth Rs.6,000)

உடுமலை வட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக, மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

காய்கறி பயிர்கள் சாகுபடி (Cultivation of vegetable crops)

மடத்துக்குளம் தாலுகா பகுதியில், தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, தர்ப்பூசணி, கத்தரி, வெண்டை, முருங்கை மற்றும் பந்தல் காய்கறிகளான பாகல், புடலை, பீர்க்கன் ஆகிய காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.

எனவே காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக நடைமுறைப் படுத்தியுள்ளது.

இடுபொருட்கள் (Inputs)

நடப்பு 2021-22ம் ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
தற்போது காய்கறி பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • அடங்கல்

  • சிட்டா

  • உரிமைச்சான்று

  • ரேஷன் கார்டு

  • ஆதார் அட்டை

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2

முன்னுரிமை (Priority)

விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அரசின் வேளாண் நலத்திட்டங்களில் இதுவரைப் பயனடையாத விவசாயிகளுக்கு, முன்னுரிமை அளித்து மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம், 75 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது.ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, 20 ஏக்கருக்கும், இதர விவசாயிகளுக்கு 55 ஏக்கருக்கும், 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு (Contact)

பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமோதரன் - 96598 38787, பிரபாகரன் - 75388 77132 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

English Summary: Free Input for Vegetable Crops - Call for Farmers! Published on: 16 December 2021, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.