மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் அங்கக வேளாண்மை எனப்படும், இயற்கை விவசாயம் செய்வோர், இலவச மரக்கன்றுகளைப் பெற்று, வரப்புகளிலும், வயல்வெளியின் ஓரங்களிலும் நடவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் (Saplings)
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக் கான இயக்கம்' என்ற புதிய வேளாண்காடு வளர்ப்புத்திட்டம் இந்த ஆண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களின் வரப்புகள் மற்றும் வயல்களில் நடுவதற்கு ரூ.15 மதிப்புள்ள வேம்பு, தேக்கு, செம்மரம், ஈட்டி, மகோகனி மற்றும் மலைவேம்பு ஆகிய மரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
பராமரிப்பு மானியம் (Maintenance grant)
கன்றுகள் நன்கு பராமரிக்கப்படு வதை ஆய்வு செய்து 2, 3 மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூ.7. பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது.கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் கைபேசிசெயலி மூலமாகவோ, அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரின் பரிந்துரையுடன் கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் ராதாமங்கலத்தில் இயங்கி வரும் வனத்துறை நாற்றங்காலிலும், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செம்பனார் கோவிலில் இயங்கிவரும் வனத்துறை நாற்றங்காலிலும் கன்றுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எத்தனைக் கன்றுகள் (How many calves)
வரப்புகளில் நடவு செய்ய 50 கன்றுக்கு மிகாமலும், குறைந்த பரப்பில் விவசாய நிலங்களில் நடவு செய்திட 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப் படுகிறது. மேலும் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத் துறையின் அனுமதியை எளிதில் பெறும் வகையில் அடங்கலில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மரங்களின் நன்மைகள் (Benefits of trees)
-
சுற்று சூழலை பாதுகாக்க உதவலாம்.
-
விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைச் சுழ்நிலையினை உருவாக்க முடியும்.
-
மண்ணின் வளத்தை மேம்படுத்த இயலும்.
-
அங்கக வேளாண் பண்ணைகளில் ஓரங்களை உயரப் படுத்தி 2 முதல் 3 வரிசைகளில் மரங்களை நட்டு பராமரித்து வந்தால் அவைகள் காற்றைத் தடை செய்து அருகில் உள்ள வயல்களிலிருந்து தெளிக்கும் மருந்துகள் காற்றின் மூலம் பரவுவதைத் தடுக்க முடியும்.
-
அதிக மழை பெய்யும் நாட்களில் மழைநீர் அருகில் உள்ள வயல்களில் இருந்து வருவதைத் தடுக்கலாம்.
-
எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் கிடைக்கும்.
தகவல்
ஆர்.சுதா
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர்
நாகப்பட்டினம்.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Share your comments