1. தோட்டக்கலை

பருத்தியில் பளிச் லாபம் ஈட்ட- ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Gain profitable cotton - Integrated crop protection!

பருத்தியில் அதிக மகசூல் பெற்றுக் கூடுதல் வருமானம் ஈட்ட, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது என வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பல ஏக்கரில் பருத்தி (Cotton on several acres)

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம், மல்லாங்கிணர் பிர்கா உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.

கள ஆய்வு (Field study)

ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக மானாவாரி பருத்தி சாகுபடி நிலங்களில் கள ஆய்வு ஒருங்கிணைப்பாளார் ஸ்ரீகிருபா, வேளாண் வல்லுநர் சந்திரசேகரன் களப்பணியாளர்கள், வேம்புலு மற்றும் முன்னோடி விவசாயிகள் கள ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறுகையி,

  • பருத்தி பயிரில் பல வகையான பூச்சிகளும் நோய்களும் விதைத்து முதல் அறுவடை வரை தாக்கி அழித்து வருகின்றன.

  • பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதால் பூச்சிகளுக்கு ஏற்படும் எதிர்ப்பு சக்தி, சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தீமை தரும் பூச்சிகளை தாக்கும்.

  • அதேநேரத்தில் நன்மை தரும் பூச்சிகள் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உதவுகிறது.

  • ஏனெனில், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு என்பது இயற்கையோடு இணைந்த பயிர் பாதுகாப்பு நிர்வாக முறை.

  • இதன்மூலம், தீமை மற்றும் நன்மை தரும் பூச்சிகள் கண்காணிக்கப்படுகின்றன.

  • அதேநேரத்தில் சிறந்த உழவியல் உயிரியல் மற்றும் கைவினை முறையைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெறலாம்.

  • இதற்கான வழிமுறைகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டது.

இனக்கவர்ச்சிப் பொறி

தற்போது சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றுக்கான தடுப்பு நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதேநேரத்தில் காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 எண்ணம் வைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

94435 70269.

மேலும் படிக்க...

8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

English Summary: Gain profitable cotton - Integrated crop protection! Published on: 13 October 2021, 07:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.