இரகங்கள்
பன்னீர் திராட்சை, அனாம் - இ - சாகி, தாம்சன் விதையில்லாதது, அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சன, அர்கா ஹான்ஸ், மாணிக்சமான், சோனாகா சரத் (விதையில்லாதது) ப்ளேம் விதையில்லாதது. அர்காசித்ரா, அர்காரிர்னா, அர்கா நீலாமானி, சுவேதா விதையில்லாதது, அர்கா மெஜிஸ்டிக் மற்றும் அர்கா சோமா மலைப்பகுதியைத் தவிர பன்னீர் அரகம், தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றது.
மண் மற்றும் தட்பவெப்பம்
நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் பூமிக்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5-க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு நிலை 1.0க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
பன்னீர் இரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். மற்ற இரகங்களுக்கு 1x1x1 மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்ட வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் அல்லது பசுந்தழை உரம் கொண்டு நிரப்பவேண்டும். பின்பு ஜீன் - ஜீலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்யவேண்டும்.
விதையும் விதைப்பும்
இடைவெளி
பன்னீர் திராட்சை |
3 x 2 மீட்டர் |
மற்ற இரகங்கள் |
4 x 3 மீட்டர் |
நீர் நிர்வாகம்
செடிகள் நட்ட பின்பும், மூன்றாவது நாளும் நீர் பாய்ச்சவேண்டும். பின்பு வாரத்திற்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும். கவாத்து செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பும், அறுவடைக்கு 15 நாட்களுக்கும் முன்பும் நீர் நிறுத்த வேண்டும்.
பின்செய் நேர்த்தி
கொடிகள் வளர்ப்பு முறை
நடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியைக் கிள்ளி விட வேண்டும். பின்பு வளரும் பக்க கிளைகள் எதிர் எதிர் திசையில் வளரவிட்டு, மென்மேலும் நுனிகளை கிள்ளி, கிளைகளை பந்தல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.
கவாத்து செய்தல்
பொதுவாக பன்னீர் இரகங்களுக்கும், பச்சை திராட்சை, மங்களூர் புளு, அனாப் - இ - சாகி அர்கா போன்ற வீரிய இரகங்களுக்கு நான்கு மொட்டு நிலையில் கவாத்து செய்யவேண்டும். தாம்சன் விதையில்லா இரகங்களுக்கு இரண்டு மொட்டு நிலையில் செய்யவேண்டும். எனினும் கணுக்களில் உள்ள மொட்டுக்களை ஆய்வு செய்து அதன்படி கவாத்து செய்தால் நன்மை பயக்கும். நலிந்த மற்றும் வளராத கொடிகளை ஒன்று அல்லது இரண்டு மொட்டுகள் விட்டு கவாத்து செய்தால் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
கவாத்து செய்யும் பருவம்
|
கவாத்து |
அறுவடை |
கோடைக்காலப் பயிர் |
டிசம்பர் ஜனவரி |
ஏப்ரல் மே |
மழைக்காலப் பயிர் |
மே ஜூன் |
ஆகஸ்ட் செப்டம்பர் |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரமிடல் : கிலோ / கொடிகளுக்கு
இரகங்கள் |
தொழு உரம் |
பசுந்தழை உரம் |
தழைச்சத்து |
மணிச்சத்து |
சாம்பல்சத்து |
||||||||||
|
l |
ll |
lll |
l |
ll |
lll |
l |
ll |
lll |
l |
ll |
lll |
l |
ll |
lll |
பன்னீர் |
50 |
50 |
100 |
50 |
50 |
100 |
0.10 |
0.20 |
0.30 |
0.08 |
0.16 |
0.24 |
0.40 |
0.80 |
1.20 |
பச்சை திராட்சை மற்றும் தாம்சன் விதையில்லாதது |
50 |
50 |
100 |
50 |
50 |
100 |
0.20 |
0.30 |
0.40 |
0.08 |
0.16 |
0.24 |
0.40 |
0.80 |
1.20 |
ஆனாபி - இ - சாகி சோனாகா மாணிக் சமான் மற்றும் சரத் விதை இல்லாதது |
50 |
50 |
100 |
50 |
50 |
100 |
0.20 |
0.40 |
0.60 |
0.08 |
0.16 |
0.24 |
0.40 |
0.80 |
1.20 |
உரத்தினை இரண்டாகப் பிரித்து கவாத்து செய்தவுடன் இடவேண்டும். சாம்பல் சத்தை இரண்டாகப் பிரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், பின்பு 60வது நாளிலும் இடவேண்டும்.
ஊட்டச்சத்து பற்றாக்குறையினைத் தடுக்க பூக்கும் தருணத்திலும் அதன் 10 நாட்கள் இடைவெளியில் 0.1 சதவீதம் போரிக் அமிலம் + 0.2 சதவீதம் துத்தநாக சல்பேட் + 0.1 சதவீதம் யூரியா கலவையினைத் தெளிக்கவேண்டும்.
சிறப்பு தொழில்நுட்பம் : பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாக பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
வண்டுகள்: கவாத்து செய்த பின்பு, இரண்டு அல்லது மூன்று முறை பாசலோன் 35 இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலைப்பேன்கள்: மிதைல் டெமட்டான் அல்லது டைமித்யேட் 30 இசி மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மாவுப்பூச்சிகள்: மிதையல் டெமட்டான் 25 இசி அல்லது மானோ குரோட்டோபாஸ் 36 டபிள்யூ எஸ்சி 1 லிட்டர் நீருக்கு 2 மி.ரி கலந்து தெளித்தோ அல்லது மீன் எண்ணெய் சோப்புடன் 25 கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கரைத்து அல்லது டைக்குளோரோவாஸ் 76 டபிள்யூ எஸ்சி ஒரு மில்லி லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மாவுப் பூச்சியினை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டுக் கட்டுப்படுத்தலாம்.
தண்டுத் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் 0.1 சதவீதம் கரைத்து தண்டுப்பகுதி முழுவதும் தடவி விட வேண்டும்.
நூற்புழுக்கள்
கவாத்து செய்வதற்கு ஒரு வாரதத்திற்கு முன்பு ஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3 ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் சூரணைகள் அல்லது 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு, பின்பு நீர் பாய்ச்சவேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணைக் கிளறுதல் கூடாது. மாற்றாக சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்னும் பூஞ்சாணக் கொல்லியினை 15 செ.மீ ஆழத்தில் இடவேண்டும்.
நோய்கள்
சாம்பல் நோய்: 0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம்.
ஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
1 சதவீத போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவும். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு கக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்பழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.
மகசூல்
விதையில்லா இரகங்கள் |
15 டன் / எக்டர் / வருடம் |
பன்னீர் திராட்சை |
30 டன் / எக்டர் / வருடம் |
பச்சை திராட்சை |
40 டன் / எக்டர் / வருடம் |
அனாபி - இ - சாகி மற்றும் அர்கா வீரிய ஒட்டு இரகங்கள் |
20 டன் / எக்டர் / வருடம் |
பழங்கள் சீரகாப் பழுக்க பன்னீர் திராட்சை இரகங்களுக்கு 0.2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில்) பழம் விட்ட 20வது மற்றும் 40வது நாளில் தெளிக்க வேண்டும். விதையில்லா இரகங்களுக்கு திராட்சைக் குலைகளை பூ உதிர்ந்த உடனும், பழங்கள் மிளகு பருமனில் இருக்கும் பொழுது ஜி.ஏ 25 பிபிஎம் (25 மில்லி கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில்) கரைசலில் நனைக்கவேண்டும்.
Share your comments