நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் சிறுதானியங்களின் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிக மகசூல் (High yield)
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மானாவாரி காடுகளில் உழவு முடித்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். எனவே இந்தச் சூழலில் சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களையும் அல்லது தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு சாகுபடி செய்து, அதிக மகசூல் ஈட்டுவதுடன், நல்ல லாபமும் பெற முடியும்.
கையிருப்பு (Stock)
குறிப்பாகத் தேனீ மாவட்டம் சின்னமனூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து, கம்பு விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளன. எனவே இவற்றை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 50% மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
நோய்த்தாக்குதல் (Infection)
வேளாண்மையின் அடிப்படை இடுபொருளான விதை தரமானதாகவும், முளைப்பு திறன் மிக்கதாகவும் இருப்பதற்கு விதை நேர்த்தி என்பது மிக அவசியமாகும். இவ்வாறு செய்வதால் நோய் தாக்குதலில் இருந்து எளிதில் பாதுகாக்கலாம்.
அதேநேரத்தில் அதிக மகசூல் பெறவும் உதவுகிறது. ரசாயனம் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்வதினால் பயிர்கள் பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் மாசடைந்து நமது உடலுக்கும் கேடு விளைவிக்கிறது. இன்று பெரும்பாலான விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலத்தை பேணவும் இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்து வருகின்றனர்.
விதை நேர்த்தியின் பயன்கள் (Benefits of Seed Treatment)
-
முளைப்புத் திறனை மேம்படுத்தும்.
-
பூஞ்சாண மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்.
-
விதை அழுகல் மற்றும் நாற்று அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயலும்.
மேலும் படிக்க...
குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!
Share your comments