நம்மில் பலரும் வீட்டு தோட்டத்திலும் , மாடி தோட்டத்திலும் அதிகம் நாட்டம் உள்ளவர்களாக இருப்போம். பெரும்பாலும் நாம் அன்றாடம் பயன் படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எனில் நமக்கு பயனுள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
நம் முன்னோர்கள் 'பருவத்தே பயிர் செய்' என்பார்கள், அதாவது பருவமறிந்து பயிர் செய்தல் நாம் நல்ல பலனை அடைய முடியம். நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம் என அறிந்து கொண்டால் நமக்கு எளிதாக இருக்கும். எனவே நமக்கு அனைவருக்கும் பயன் படும் வகையில் சிறிய அட்டவணை. தமிழ் மாதங்களை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்க பட்டுள்ளது.
சித்திரை முதல் பங்குனி வரை எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?
தமிழ் மாதங்கள் |
ஆங்கில மாதங்கள் |
காய்கறிகள் |
சித்திரை - வைகாசி |
மே |
கத்தரி, தக்காளி, கொத்தவரை |
வைகாசி - ஆனி |
ஜூன் |
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, முருங்கை |
ஆனி -ஆடி |
ஜூலை |
மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி |
ஆடி - ஆவணி |
ஆகஸ்ட் |
முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரைக்காய் |
ஆவணி - புரட்டாசி |
செப்டம்பர் |
கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி |
புரட்டாசி - ஐப்பசி |
அக்டோபர் |
கத்தரி, முள்ளங்கி |
ஐப்பசி - கார்த்திகை |
நவம்பர் |
முருங்கை, கத்தரி , தக்காளி, முள்ளங்கி, பூசணி |
கார்த்திகை - மார்கழி |
டிசம்பர் |
கத்தரி, தக்காளி |
மார்கழி - தை |
ஜனவரி |
கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் |
தை - மாசி |
பிப்ரவரி |
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் |
மாசி - பங்குனி |
மார்ச் |
வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் |
பங்குனி - சித்திரை |
ஏப்ரல் |
கொத்தவரை, வெண்டை |
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments