இப்போதெல்லாம் பலர் மாடித்தோட்டத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அடுத்த எந்த காயை பயிரிடலாம் அல்லது எந்த பழத்தை பயிரிடலாம் என பல யோசனைகள் இருக்கும், அதற்கு சரியான தேர்வு தர்பூசணியாகும். தர்பூசணி செடியை நடவு, செய்வதற்கு தேவையான அனைத்து முறைகளும், இந்தப் பதிவில் காணலாம்.
செடி பயிரிட வேண்டும் என்று எண்ணும்போது பல குழப்பங்கள் வருகின்றன. அதில் முதலாவது, மண் கலவையை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதுதான் வாருங்கள் அதற்கான படிகளை தெரிந்துக்கொள்ளலாம்.
மாடித் தோட்டத்திற்கு, தொட்டியில் மண் கலவை எப்படி தயார் செய்ய வேண்டும்?
Watermelon cultivation - மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது தொட்டிகளை பயன்படுத்தினால் அவற்றில் சிறிதளவு மாட்டுச்சாணம் அதாவது 1 பங்கு, தேங்காய் நார் கழிவு 2 பங்கு, சமையலறை கழிவு 1 பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும், இது முக்கிய படியாகும்.
இந்த கலவை தயாரானதும், உடனே விதைப்புக்கு தொட்டி தயார் என எண்ணிவிட வேண்டாம். கலவை தயாரானதும், பத்து நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைகளை நடவு செய்ய வேண்டும், இது நல்ல மகசூல் தரும் என்பது குறிப்பிடதக்கது.
இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும் என்பது முக்கிய படியாகும்.
மாடி தோட்டம் பந்தல் அமைக்கும் முறை குறித்த தகவல்:
Water melon Cultivation - மாடியில் பந்தல் அமைப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகும், மேலும் இது தர்பூசணி பயிரிட நல்ல வழியாகும். இதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி கொள்ளுங்கள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை அழமாக நட்டு மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைத்தல் வேண்டும்.
அடியில் சிறு கற்கள் கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்ததாகும். பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும், இது மிக முக்கியமாகும்.
இதையும் படியுங்கள்: விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!
இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும், இதனால் கொடியில், எந்த பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடதக்கது. இந்த பந்தல் மற்ற காய்கறி செடிகளுக்கு நிழலாகவும் பயன்படும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போட்டுக்கொள்ளலாம். இதன் காய்கள் அதிக எடை அளவு கொண்டதால் பந்தல் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இல்லையெனில் சுவற்றின் மீதும், தரையிலும் கூட படர விடலாம்.
மேலும் படிக்க: கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்
நீர் நிர்வாகம்:
- மாடித் தோட்டம் தர்பூசணி வளர்ப்பு முறை பொறுத்தவரை விதைகளை விதைத்தவுடன் நீர் தெளித்திட வேண்டும்.
- தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் படிக்க:
பேருந்து கட்டண உயர்வு குழப்பம்: போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்
Share your comments