மானாவாரி பருவத்தில், முக்கியப்பயிருடன் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி செய்வதால், கூடுதல் விளைச்சலும், வருமானமும் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சிறுதானியம் (Cereal)
திருப்பூர் மாவட்டத்தில், 30 சதவீத அளவிலான சாகுபடி பரப்பு மழையை எதிர்பார்த்து அமைந்துள்ளது. இங்கு, சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்துப்பயிர்கள், அதிகம் சாகுபடி செய்யப் படுகின்றன.
ஆனால், மண் வளம் காப்பது, மண் ஈரம் காப்பது, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளாமல் இருப்பது போன்ற காரணங்களால், அதிக விளைச்சல் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
நவீனத் தொழில்நுட்பங்கள் (Modern technologies)
எனவே, நவீனத் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக, விளைச்சலை அதிகப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது :
மகசூல் குறைகிறது (Yield decreases)
மானாவாரி பகுதிகளில் நீர் ஆவியாதல், பின்தங்கும் பருவ மழை, அதிக காலம் வறட்சி நீடித்தல், பருவ மழையால் பயிர்ச் சேதம் ஏற்படுதல், வறட்சி மேலாண்மை போன்ற பல்வேறு காரணங்களால், சாகுபடியில் மகசூல் குறைகிறது.
கடைப்பிடிக்க வேண்டியவை (Things to follow)
-
இதற்கு மண்ணில் ஈரம் காத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் களை நிர்வாகம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
-
மழை நீரை உரிய முறையில் சேமிப்பு செய்தால், வறட்சிக் காலங்களில் பாசனம் செய்யவும், அடி மண் ஈரம் காத்து பயிர்களுக்குப் பயன்படுத்தவும் உதவுகிறது.
-
மண்ணில் உள்ள ஈரம் ஆவியாவதைத் தடுக்க, பாலித்தீன் விரிப்புக் கட்டைகள், காய்ந்த இலைச் சருகுகள், தென்னை நார்க் கழிவுகள் போன்றவற்றினால் மூடி மண் ஈரத்தைப் பாதுகாக்கலாம்.
மானாவாரியில் முக்கியப் பயிருடன் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி செய்வதால், கூடுதல் விளைச்சலும், வருமானமும் கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க...
அடங்காத வெள்ளை ஈக்கள்- பாதுகாக்க உதவும் உயிரியல் கட்டுப்பாடு!
சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!
Share your comments