உளுந்தில், அதிக மகசூல் தரும் வம்பன் 6 உட்பட உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்வு செய்து பயிரிடுவதன் மூலம், விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.
புரதத்தின் ஊற்று (Source of protein)
பயறு வகைகள் மனிதர்களுக்கு தேவையான புரதத்தை வழங்குவதில் 'முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை 60 சதவீதம் பயறு வகைகள் மானாவாரியாக மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றன. பயறு உற்பத்தி செய்வதோடு பயன்படுத்துவதிலும் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது.
அரசு நடவடிக்கை (Government action)
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக, பயறு உற்பத்தியைப் பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக வேளாண் மக்களுக்கு தரமான விதைகள் விநியோகம் செய்யப்படுவதோடு விதை உற்பத்தியாளர்களுக்கு விதை உற்பத்தி மானியமும் வழங்கப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் 6, வம்பன் 8 , வம்பன் 10 ஆகிய உளுந்து இரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
வம்பன் 6
-
வம்பன் 6 இரகம் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது.
-
மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இந்த ரகம், ஹெக்டருக்கு 890 கிலோ மகசூல் தரக் கூடியது.
வம்பன் 8
-
வம்பன் 8 இரகம் இலை சுருட்டு புழு, மஞ்சள் தேமல் நோய்களை எதிர்க்கும்திறன் கொண்டது.
-
புரதத்தின் அளவு 21.9 சதவீதம் ஆகும். ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையது.
-
இலை சுருட்டு புழு மற்றும் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
-
ஹெக்டருக்கு 1130 கிலோ மகசூல் தரக்கூடியது.
வம்பன் 11
-
தற்பொழுது வம்பன் 11 என்ற புதிய இரகம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
-
ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்றது.
-
மேலும் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
-
புரதத்தின் அளவு 22.6 சதவீதம் ஆகும்.
-
ஹெக்டருக்கு 896 கிலோ மகசூல் தரக்கூடியது.
வேளாண்துறை வலியுறுத்தல் (Agricultural emphasis)
எனவே எதிர்வரும் பருவத்தில் பயறு சாகுபடி செய்யவுள்ள விதைப்பண்ணை விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆதார விதைகளை பெற்றிடத் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா.ஆனந்தசெல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
நல்ல விதைகளைத் தேர்வு செய்வது எப்படி?
அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!
Share your comments