விவசாயத்தைப் பொருத்தவரை, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலே அமோக மகசூலைப் பெற முடியும். இதற்கு வரிசை விதைப்பு முறை மிகச்சிறந்த உதாரணமாகும்.
அந்த வகையில், வரிசை விதைப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, விதைப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம்' என விதைப் பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கு சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமாகும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர். பரமக்குடி, சத்திரக்குடி, நயினார் கோவில், இராமநாதபுரம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை மற்றும் மண்டபம் வட்டாரங்களில் 80% சாகுபடி பரப்பில் நெல் மானாவாரி பயிராக நேரடி விதைப்பு செய்கின்றனர்.
வரிசைக் கணக்கு
மானாவாரி சாகுபடிக்கு உகந்த குறுகிய மற்றும் மத்திய கால சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்து விதைக்கும் கருவிகள் கொண்டு வரிசைக்கு வரிசை 20 செ.மீ இடைவெளியும், பயிருக்கு பயிர் 15 செ.மீ இடைவெளியும், 3 முதல் 5 செ.மீ ஆழத்தில் எக்கருக்கு 15 கிலோ விதை விதைப்பதன் மூலம் சீரான இடைவெளியில் பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
செலவு குறையும்
விதைக்கும் கருவிகள் மூலம் விதைப்பதால் எக்கருக்கு 35 கிலோ விதைக்கு பதிலாக 15 கிலோ விதையே போதுமானது. இதனால் விதை நெல்லிற்கான செலவை குறைக்கலாம். மேலும் பயிர்கள் காற்றோட்டத்துடன் வளர்வதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறைவு என்பதால் பயிர் பாதுகாப்புச் செலவும் கணிசமாக குறைகிறது.
அதிகாரிகள் அறிவுறுத்தல்
ஆகவே விவசாயிகள் அனைவரும் வரிசை விதைப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் மற்றும் இலாபம் பெறுமாறு விதைப் பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர் முருகேஸ்வரி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்க...
காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!
நுண்ணீர் பாசனத்திற்குரூ.25,000 மானியம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!
Share your comments