1. தோட்டக்கலை

குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்: தேனீ வளர்ப்பு: லாபம் கொட்டும் தேனீ

KJ Staff
KJ Staff

தேனீக்களின் வகைகள் , கொம்புத் தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ, மேற்குலகத் தேனீக்கள், கிழக்குலகத் தேனீக்கள் ஆகும். தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும். மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றது. இதில் இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும்.ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீ மட்டுமே இருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.  ஆண் தேனீக்கு கொடுக்கு அமைப்பு இல்லாத காரணத்தால் இதன் வேலை இனப்பெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமேயாகும். மற்ற தேனீக்களான பனித் தேனீ, அல்லது வேலைக்கார தேனீக்கள்  கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், தேன் சேகரிப்பது மற்றும் கூட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன.  இப்படி தேனீக்களின் கூட்டிலும் வேலை பிரிவுகள் உண்டு.

தேனீ வளர்ப்பிற்கான மாதிரி திட்ட அறிக்கை  

தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது.

முதலீடு

தேனீ வளர்ப்புப் பெட்டிகள்   5 எண்ணம் X 2200 வீதம் = 11000

1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 1000

முதலீட்டுச் செலவு = 12000/-

வருமானம்

தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 15 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 75 கிலோ கிடைக்கும்.

விற்பனை 75 கிலோ X 300 ரூபாய் = 22500/-

மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 10 கிலோ கிடைக்கும்.

விற்பனை 10 கிலோ X 500 ரூபாய் = 5000

புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4காலனிகள் வீதம்

1 காலனிக்கு ரூபாய் 700 வீதம் 5X 4X 700 = 14000

முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 41500

நிகர வருமானம்

முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 41500

முதலீட்டுச் செலவு =12000

முதலாம் ஆண்டு நிகர வருமானம் =29500/-

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்களாவன...

🐝தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்.

🐝குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இலகு.

🐝தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 40 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.

 

English Summary: honey bee breeding: High returns on low investment: bee rearing: profitable bucket Published on: 10 May 2019, 12:40 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.