1. தோட்டக்கலை

பருவமழைக் காலத்தில் பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to protect crops during monsoon?
Credit : Bamco

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்  (Northeast Monsoon) பின்பற்ற வேண்டிய வேளாண் நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை  பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • அறுவடைப் பருவத்திலுள்ள நிலங்களைச் சுத்தமாக வடிகட்டுதல் வேண்டும்.

  • அதிகக் காற்றின் ஈரப்பதமானது பூஞ்சண நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

  • சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் மண்ணின் வெப்பநிலை சத்துக்களான துத்தநாகம் மற்றும் போரான் சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு பாதிக்கப்படும் என்பதை விவசாயிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  • அதிக மழை பெய்யும் பொழுது மழையினால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட அதிக அளவு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரம் இட வேண்டும்.

  • சத்துப்பற்றாக்குறை ஏற்படும் போது யூரியா மற்றும் நுண்ணூட்ட உரத்தினை இலைவழியாகத் தெளிப்பது மிக மிக அவசியமாகிறது

  • பண்ணைக் குட்டைகளில் அதிக மழை நீரோட்டத்தினை சேகரித்து சேமித்துக் கொள்ள வேண்டும். இந்நீரை மறுசுழற்சியாக தாழ்வு நிலப்பகுதிகளில் நுண்ணீர்ப் பாசனம், மழை தூவுவான் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை நிரப்புவதற்கு தவறாமல் பயன்படுத்த முன்வர வேண்டும்.

  • பூக்கள் மற்றும் நோய்கள் தென்படுகின்றதா என்று கூர்ந்து கண்காணிப்பது அவசியம்.

மக்காச்சோளம்

  • விதைத்த 25-ம்நாள் பயிருக்கு 143 கிலோ யூரியா மற்றும் 45-ம்நாள் 77 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

  • ஹெக்டேருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 50 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது 50 கிலோ மணலுடன் இட வேண்டியது அவசியம்.

  • வேர் அழுகல் நோய் தென்பட்டால் கார்பென்சிம் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்

  • 30 நாள் பயிருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயறு அதிசயம் எக்டருக்கு 5 கிலோ அல்லது DAP 2% கரைசலை இலை வழியாக 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்தல் வேண்டும்.

Credit : IndiaMART

நிலக்கடலை (Groundnut)

  • இலை மஞ்சள் நிறமாகத் தென்பட்டால் 1% யூரியா அல்லது 19:19:19 கலப்புரம் தெளிக்கவும்

  • ஹெக்டேருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது 50 கிலோ மானலுடன் இட வேண்டும்.

  • வேர் அழுகல் நோய் தென்பட்டால் கார்பென்டாசிம் 1 லிட்டர் நீருக்கு,1 கிராம் தெளித்தல் வேண்டும்

பருத்தி (Cotton)

  • 0.5% மெக்னீசியம் சல்பேட் ஒரு ஹெக்டேருக்கு 3 கிலோ போதுமான நீரில் கலந்து தெளிக்கவும்.

  • 40 பிபிஎம் நாப்தலீன் அசிட்டிக் அமிலம் 4.5 மில்லி லிட்டர் என்ற அளவில்10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

  • காய் அழுகலுக்கு ஒரு ஹெக்டேருக்கு கார்பென்டாசிம் 500 கிராம் அல்லது மேன்கோசெப் 2 கிலோ என்ற அளவில் வயலில் இட வேண்டும்.

கரும்பு (Sugarcane)

  • நடவிற்கு 15 நிமிடங்கள் முன்பு விதைக் கரணைகளை கார்பென்டசிம் 50 WP 0.05% மருந்தை யூரியா 1% உரத்தில் கலந்து விதை நேர்த்தி செய்து நட வேண்டும்

  • கரிப்பூட்டை நோய் மற்றும் புல் தண்டு நோய்த் தாக்குதலைத் தவிர்க்க கரும்பு விதைக் கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட காற்றோட்டமான நீராவியில் காண்பித்து நடவு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வேளாண் தொழிற்றுப்பங்களையும் கடைப்பிடிப்பதால் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் உயர் விளைச்சல் பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!

English Summary: How to protect crops during monsoon? Published on: 22 December 2020, 11:16 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.