மண் இல்லாமல் நீரை மட்டுமே கொண்டு விவசாயம் செய்யும் முறை தான் ஹைட்ரோபோனிக்ஸ். இந்த முறையில் வீட்டுத் தோட்டங்களை எவ்வாறு அமைக்கலாம் என்பதை பார்ப்போம்.
வீட்டுத் தோட்டம்
ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) தோட்டத்தை, ஆறு வகையான முறைகளில் அமைக்கலாம். ஒரு வீட்டுக்கு தேவையான காய்கறி பயிரிட 240 சதுர அடி வரையில், வீட்டின் அறைகளில், கார் பார்கிங், மொட்டை மாடி போன்ற இடங்களில் கூட அமைக்கலாம். சிறிய அளவிலான வியபாரத்திற்கு, 500 - 1000 சதுர அடியில், வீட்டின் மொட்டை மாடி, காலி இடங்களில் அமைக்கலாம்.
காலி இடமாக, 5000 - 20000 சதுர அடி கிடைத்தால், மார்கெட், ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சப்ளை செய்யும் அளவிற்கு காய்கறி, பழம், கீரை உற்பத்தி (Production) செய்ய முடியும். ஏக்கர் கணக்கிலும் இந்த தோட்டத்தை அமைக்க முடியும். துளைகள் இடப்பட்ட, 'பிவிசி' பைப்புகளை சுவற்றில் ரேக்குகள் போன்ற அடுக்குகள் அல்லது தரையில் மேசை போன்ற சட்டங்களை அமைத்து பொறுத்த வேண்டும். இருக்கும் இட வசதியை பொறுத்து, பிவிசி (PVC) சட்டங்களின் எண்ணிக்கையும், செடிகளின் எண்ணிக்கையும் இருக்கும். பைப்களில் நீர் நிரப்பி விதைகள் போட வேண்டும்.
மண்ணில் இருந்து செடிகளுக்கு தேவையான கனிமங்கள், வைட்டமின்களை பிரித்தெடுத்து, அதனுடன் இயற்கையான முறையில் தயாரான உரங்கள் என, செடிகளுக்கு தேவையான, 16 வகையான சத்து பொருட்களை, தண்ணீரில் கலந்து விடுவதால், நேரடியாக அவை வேர்களுக்கு செல்கிறது. மண் விவசாயத்தில், சில விதைகள் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும்; சில விதைகள் விளையாமல் கூட போகும். அதே போல் ஊட்டச்சத்துகள் பயிர்களுக்கு முழுமையாக, சீராக கிடைக்காமல் போகும்.
ஆனால், இந்த முறையில், தண்ணீர் சுழற்சி முறையில் (Rotational Method) சீராக சென்று கொண்டே இருப்பதால், ஊட்டச்சத்துகள் முழுமையாக, அனைத்து செடிகளுக்கும் கிடைக்கும். இதனால் செடிகள், இலைகள், காய் கனிகள் அனைத்துமே, ஒரே அளவில் சீராக வளர்ந்து பலன் கொடுக்கும்.எந்தவித பூச்சிகொல்லி மருந்துகளோ, கெமிக்கலோ இல்லாத ஆர்கானிக் விவசாய முறை இது. புழு, பூச்சிகளால் செடிகள் பாதிப்பது, களைகள் வளரும் வாய்ப்புகள் இதில் கிடையாது. செடிகளில் கொசு வராமல் இருக்க, வேப்ப எண்ணெயை (Neem Oil) சிறிது ஸ்பரே செய்து விட்டால் போதும்.
எவ்வளவு தண்ணீர் தேவை
ஒரு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட அதிகபட்சமாக, 40 லிட்டர் தண்ணீர் போதுமானது. மற்ற முறை விவசாயத்திற்கு செலவழிக்கும் தண்ணீரை விட, 10 சதவீதமே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்துக்கு தேவைப்படும்.
ஒரு கேனில் தண்ணீர் நிரப்பி மோட்டர் பொருத்தப்படும். ஒரு மீன் தொட்டியில் ஓடும் மோட்டாருக்கு தேவைப்படும் அளவுக்கே, இதற்கும் மின்சாரம் தேவைப்படும். சூரிய ஒளி இல்லாத இடத்தில் கூட, 'எல்இடி' லைட் மூலம், செடிகளுக்கு ஒளி கொடுக்கலாம்.பட்ஜெட் எவ்வளவுமுதலீட்டை பொறுத்தமட்டில், 300 ரூபாய் பட்ஜெட்டில், இரண்டு கீரைகள் அல்லது காய்கறிகள் பயிரிடலாம். இடத்திற்கு ஏற்றவாறு, முதலீடு லட்சங்கள் வரை போகும்.
மேலும் படிக்க
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!
Share your comments