1. தோட்டக்கலை

2022-23 பட்ஜெட்டில் : தோட்டக்கலைத் துறைக்கு வந்த சோதனை!

Deiva Bindhiya
Deiva Bindhiya
In the 2022-23 budget: Bad news for horticulture sector!

2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன் பல்வேறு துறையினர், இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர், என்பது அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக, இந்திய தோட்டக்கலைத் துறையில் பல்வேறு ஊக்கச் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏன்? இதற்கான பதிலை, இந்த பதிவில் காணலாம்.

இந்த பட்ஜெட்டில், தோட்டக்கலைத் துறையில் ஒவ்வொரு பிரிவாக நிதி ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் தோட்டக்கலையில் அதிகம் சாகுபடி ஆவது, தேயிலையாகும். ஆனால் இம்முறை, தேயிலை வரியத்துக்கு ரூ.131.92 கோடியும், காபி வாரியத்துக்கு ரூ. 226.21 கோடியும், ரப்பர் வாரியத்துக்கு ரூ. 268.76 கோடியும், நறுமணப் பொருட்கள் வாரியத்துக்கு ரூ.115.5 கோடியும் ஒதுகப்பட்டது, சற்று ஏமாற்றம் அளித்துள்ளது. இதில் தேயிலை வாரியத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு சென்ற ஆண்டைவிட இரு மடங்கு குறைவாக உள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதே நேரம், 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தேயிலை வாரியத்துக்கு ரு.353.65 கோடியும், காபி வாரியத்துக்கு ரூ.188.41 கோடியும், ரப்பர் வாரியத்துக்கு ரூ.263.95 கோடியும், நறுமணப் பொருட்கள் வாரியத்துக்கு ரூ.115.50 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தேயிலை வாரியத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது, குறித்து தேயிலை வாரியத்தின் துணைத் தலைவரான கே.என். ரகுவரன் பேசுகையில், “தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் மானியத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால்தான் பட்ஜெட் ஒதுக்கீடும் குறைந்திருக்கிறது. இதற்கு முன்னர் பெரிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டது எனவும், இப்போது அது நிறுத்தப்பட்டு சிறிய உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது” எனவும் கூறிப்பிட்டார்.

எனினும், காபி மற்றும் ரப்பர் துறைக்கு வழங்கப்பட்ட அளவுகூட தேயிலை துறைக்கு வழங்கப்படவில்லை என்று இத்துறையினர் கவலை தெரிவித்து வருகின்றனர். ரப்பர் துறையில் சில திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைய நிதி ஒதுக்கீடு ரப்பர் துறைக்கு போதுமானதாக இருக்கும் என்று ரகுவரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆண்டுக்கு, ஒரு LPG சிலிண்டராவது இலவசமாக வேண்டுமா? இதை செய்யுங்கள்!

தோட்டக்கலைத் துறைக்கு, இன்னும் ரூ. 30 முதல் ரூ. 50 கோடி வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தென்னிந்திய ஒருங்கிணைந்த தோட்டக்கலை கூட்டமைப்பின் செயலாளரான ஆர். சஞ்சித் கூறுகிறார். இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் எனவும் ரப்பர் துறையினர் பட்ஜெட்டுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

ஆண்டுக்கு, ஒரு LPG சிலிண்டராவது இலவசமாக வேண்டுமா? இதை செய்யுங்கள்!

English Summary: In the 2022-23 budget: Bad news for horticulture sector! Published on: 04 February 2022, 04:55 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.