இயற்கை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்ணின் வளத்தை மட்டுமல்லாமல், மக்களின் உடல்நலத்தையும் கருத்தில்கொண்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு நஞ்சில்லா உணவு வழங்கும் இயற்கை விவசாயிகளின் பணி மகத்தானது. ஈடு இணையற்றது.
எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோருக்கு ஊக்கத்தொகை வழங்க தமிக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி வெண்டை, கத்திரி, தக்காளி ஆகியவற்றை பயிரிடும் இயற்கை விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 1,500 ரூபாய் மானியம் வழங்கப்படும்.புதிதாகவும் மற்றும் ஏற்கனவே இயற்கையாக காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, அங்கக சான்று பெற, 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், தக்காளி, கீரை, முருங்கை, வெண்டை, கத்தரி போன்றக் கொடி வகை காய்கறிகளை, பருவமற்ற காலங்களிலும் பயிரிடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள இயற்கை விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், அந்தந்த மாவட்டத் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம்.
தகவல்
தோட்டக்கலை துணை இயக்குனர்கள்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
மேலும் படிக்க....
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
பாக்கெட் சானிடைசர் கம் பேஸ்மாஸ்க் ஸ்ப்ரே- நாட்டிலேயே முதன்முறையாக உதகையில் தயாரிப்பு!
Share your comments